57.
கலிகாலக் கொடுமை
தாய்புத்தி
சொன்னால் மறுத்திடும் காலம்உயர்
தந்தையைச் சீறுகாலம்
சற்குருவை நிந்தைசெய் காலம்மெய்க் கடவுளைச்
சற்றும்எண் ணாதகாலம்
பேய்தெய்வம்
என்றுப சரித்திடுங்காலம்
புரட்டருக் கேற்றகாலம்
பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம்நற்
பெரியர்சொல் கேளாதகாலம்
தேய்வுடன்
பெரியவன் சிறுமையுறு காலம்மிகு
சிறியவன் பெருகுகாலம்
செருவில்விட் டோடினார் வரிசைபெறு காலம்வசை
செப்புவோர்க் குதவுகாலம்
|