பக்கம் எண் :

93

           56. வேசையர்

பூவில்வே சிகள்வீடு சந்தைப் பெரும்பேட்டை
     புனைமலர் படுக்கைவீடு
பொன்வாசல் கட்டில்பொது அம்பலம் உடுத்ததுகில்
     பொருவில்சூ தாடுசாலை

மேவலா கியகொங்கை கையாடு திரள்பந்து
     விழிமனம் கவர்தூண்டிலாம்
மிக்கமொழி நீர்மேல் எழுத்ததிக மோகம் ஒரு
     மின்னல்இரு துடைசர்ப்பமாம்

ஆவலாகிய வல்கு லோதண்டம் வாங்குமிடம்
     அதிகபடம் ஆம்மனதுகல்
அமிர்தவாய் இதழ்சித்ர சாலையெச் சிற்குழி
     அவர்க் காசை வைக்கலாமோ

மாவடிவு கொண்டே ஒளித்தவொரு சூரனை
     வதைத்தவடி வேலாயுதா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மாவடிவு கொண்டு ஒளித்த ஒரு சூரனைவதைத்த
வடிவேலாயுதா - மாமர வடிவாக நடுக்கடலிலே மறைந்த ஒப்பற்ற
சூரபதுமனைப் பிளந்த வடிவேலனே!, மயிலேறி.........குமரேசனே!-, பூவில்
வேசிகள் வீடு பெருஞ் சந்தைப்பேட்டை - உலகில் பொதுமகளிர் வீடு
பெரிய சந்தைப்பேட்டை; மலர்புனை படுக்கைவீடு பொன்வாசல் -
மலர்களாலே அணிசெயப்பெற்ற படுக்கை அறை பொன்பறிக்கும் வாயில்;
கட்டில் பொது அம்பலம் - படுக்கைக்கட்டில் பலருக்கும் பொதுவான இடம்;
உடுத்ததுகில் பொருஇல் சூதுஆடு சாலை - அவர்கள் உடுத்த ஆடை
ஒப்பற்ற சூதாடும் அரங்கு; மேவல் ஆகிய கொங்கை கை ஆடு திரள்பந்து
- விருப்பத்தையூட்டும் அவர்களின் கொங்கைகள் (பலர்) கையாலும்
ஆடத்தக்க திரண்ட பந்து;