பக்கம் எண் :

98

சனித்த முத்து அரசனது தேகத்தின்மேல் இருக்கும் - விளங்குகின்ற
சிப்பியினிடம் உண்டான முத்து மன்னவர் மெய்யிலே அழகுசெய்யும்;
போற்றியிடு பூச்சியின் வாயின் நூல் பட்டு என்று பூசைக்கு நேசம் ஆகும் -
ஆதரிக்கப் பெறும் பட்டுப்பூச்சியின் வாயில் உண்டான நூல் பட்டு என்று
சிறப்புப்பெற்றுக் கடவுளை வழிபட (உடுத்த) அன்புடன் கொள்ளப்படும்;
புகல் அரிய வண்டு எச்சில் ஆன தேன் தேவர்கொள் புனித அபிடேகம்
ஆகும் - கூறுதற்கரிய இனிமையுடைய வண்டின் எச்சிலான தேன்வானவ
ரேற்றுக்கொள்ளுந் தூய முழுக்குப்பொருள் ஆகும்; சாற்றிய புலாலொடு
பிறந்த கோரோசனை சவாது புழுகு அனைவர்க்கும் ஆம் - கூறப்பட்ட
இழிந்த ஊனுடன் தோன்றிய கோரோசனையும் சவ்வாதும் புழுகும்
யாவர்க்கும் பயன்படும்; சாதியீனத்தில் பிறக்கினும் கற்றோர்கள் சபையின்
மேல்வட்டம் அன்றோ? - இழிந்த குலத்தில் பிறந்தாலும் கற்றறிந்தவர்கள்
அவையிலே சிறந்த இடத்தில் இருப்பார்கள் அல்லவா?

     (விளக்கவுரை) முருகனே திருஞானசம்பந்தராகத் தோன்றினார்
என்னும் கொள்கையை உட்கொண்டு பாண்டியன் வெப்பு நோயைத்
தணித்ததாகக் கூறினார். திகழ்தல் - விளங்குதல். புகலுதல் - சொல்லுதல்.
புலால் - இழிந்தது (ஊன்).

     (கருத்து) பிறப்பினால் உயர்வு தாழ்வு கருதலாகாது; செயலாலே
கொள்ளவேண்டும்.                                    (59)

         60. செயத் தகாதவை

தானா சரித்துவரு தெய்வமிது என்றுபொய்ச்
     சத்தியம் செயின்விடாது
தன்வீட்டில் ஏற்றிய விளக்கென்று முத்தந்
     தனைக்கொடுத் தால்அதுசுடும்

ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனதென்
     றடாதுசெய் யிற்கெடுதியாம்
ஆனைதான் மெத்தப் பழக்கம்ஆ னாலுஞ்செய்
     யாதுசெய் தாற்கொன்றிடும்