(அருஞ்சொற்கள்)
ஆசரித்தல் - வழிபடுதல். தீன் - உணவு.
சூனு (வட) - மகன்.
(கருத்து)
யாவராயினும் அளவுக்கு மீறினால் கெடுதியே உண்டாகும்.
(60)
61.
நடுவுநிலைமை
வந்தவிவ
காரத்தில் இனியபரி தானங்கள்
வருமென்றும் நேசரென்றும்
வன்பகைஞ ரென்றுமய லோரென்றும் மிக்கதன
வானென்றும் ஏழையென்றும்
இந்தவகை
யைக்குறித் தொருபட்ச பாதம்ஓர்
எள்ளள வுரைத்திடாமல்
எண்ணமுட னேலிகித புத்தியொடு சாட்சிக்கும்
ஏற்கச்ச பாசமதமாம்
முந்த
இரு தலையும் சமன்செய்த கோல்போல்
மொழிந்திடின் தர்மமதுகாண்
முனைவீமன் உடல்பாதி மிருகந் தனக்கென்று
முன்தருமர் சொன்னதலவோ?
மைந்தனென
அன்றுமை முலைப்பால் கொடுத்திட
வளர்ந்தருள் குழந்தைவடிவே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
அன்று உமை மைந்தன் என்று முலைப்பால் கொடுத்திட
வளர்ந்தருள் குழந்தை வடிவே! - முற்காலத்தில் உமையம்மை மகனென்று
முலைப்பால் அளிக்க வளர்ந்தருளிய குழந்தை உருவமுடையவனே!,
மயிலேறி..........குமரேசனே! -, வந்த விவகாரத்தில் - தன்னிடத்தில் வந்த
வழக்கிலே, இனிய பரிதானங்கள் வருமென்றும் - நல்ல இலஞ்சப்பொருள்கள்
கிடைக்கும் எனவும், நேசர் என்றும் - நண்பர்கள் எனவும், வன் பகைஞர்
என்றும் - கொடிய பகைவர்கள் எனவும், அயலோர் என்றும் - பழக்க
|