பக்கம் எண் :

102

      62. ஓரம் சொல்லேல்

ஓரவிவ காரமா வந்தவர் முகம்பார்த்
     துரைப்போர் மலைக்குரங்காம்
உயர்வெள் ளெருக்குடன் முளைத்துவிடு மவர்இல்லம்
     உறையும் ஊர் பாழ்நத்தம்ஆம்

தாரணியில் இவர்கள்கிளை நெல்லியிலை போல்உகும்
     சமானமா எழுபிறப்பும்
சந்ததியிலா துழல்வர் அவர்முகத் தினின்மூத்த
     தையலே குடியிருப்பாள்

பாரமிவர் என்றுபுவி மங்கையும் நடுங்குவாள்
     பழித்ததுர் மரணமாவார்
பகர்முடிவி லேரவுர வாதிநர கத்தனு
     பவிப்பர்எப் போதுமென்பார்

வாரமுடன் அருணகிரி நாதருக் கனுபூதி
     வைத்தெழுதி அருள் குருபரா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) வாரமுடன் அருணகிரிநாதருக்கு அனுபூதி வைத்து
எழுதியருள் குருபரா - அன்புடன் அருணகிரியாருக்கு அநுபூதியெழுதும்
நிலையை அருளிய குருபரனே!, மயிலேறி.....குமரேசனே! -, ஓர விவகாரம்
ஆ(க) - வந்தவர் முகம் பார்த்து உரைப்போர் மலைக்குரங்கு ஆம் ஒருதலை
வழக்காக வந்தவர்களுடைய முகத்தைப் பார்த்துத் தீர்ப்புக் கூறுவோர்
மலைக்குரங்காவர்; அவர் இல்லம் உடன் உயர் வெள் எருக்கு முளைத்து
விடும் - அவர் வீட்டிலே உடனே உயரமான வெள் எருக்கஞ் செடிகள்
தோன்றிவிடும்; உறையும் ஊர்பாழ் நத்தம்ஆம் - அவர்கள் குடியிருக்கும்
ஊரும் பாழான நத்தமாகிவிடும். தாரணியில் இவர்கள் கிளை நெல்லியிலை
போல் உகும் - உலகிலே இவர்களுடைய உறவினர் நெல்லியின் இலைபோலப் பிரிந்து