பக்கம் எண் :

104

     (இ-ள்.) மயிலேறி.............குமரேசனே! -; கொங்கை இல்லாதவட்கு
எத்தனைப் பணி உடைமை கூடினும் பெண்மையில்லை - கொங்கையில்லாத
பெண்ணுக்கு எவ்வளவு அணிகளும் ஆடைகளும் இருந்தாலும்
பெண்மையின் அழகுவராது. கூறும் நிறைகல்வி யில்லாமல் எத்தனை கவிதை
கூறினும் புலமையில்லை - புகழத்தக்க நிறைந்த கல்வி யில்லாமல் எவ்வளவு
செய்யுள் இயற்றினாலும் புலமையாகாது; சங்கை இல்லாதவர்க்கு எத்தனை
விவேகம் தரிக்கினும் கனதைஇல்லை - நாணம் இல்லாதவர்களுக்கு
எத்துணை அறிவிருப்பினும் பெருமையுண்டாகாது; சட்சுவை பதார்த்தவகை
உற்றாலும் நெய்யிலாச் சாதமும் திருத்தியில்லை - அறுசுவைக்
கறிகளிருந்தாலும், நெய்யில்லாவுண்டி மனநிறைவு தராது; பங்கயம் இலாமல்
எத்தனை மலர்கள் வாவியிற் பாரித்தும் மேன்மையில்லை - தாமரைமலர்
இல்லாமல் வேறு எத்துணைப் பூக்கள் பொய்கையில் நிறைந்தாலும்
உயர்வில்லை; பத்தி இல்லாமல் வெகு நியமமாய் அர்ச்சனைகள் பண்ணினும்
பூசையில்லை - அன்பின்றி மிக ஒழுங்காக மலரிட்டு வணங்கினாலும்
வழிபாடாகாது; மங்கையர் இலா மனைக்கு எத்தனை அருஞ்செல்வம் வரினும்
இல்வாழ்க்கை இல்லை - மனைவியர் இல்லாத இல்லத்திற்கு எவ்வளவு அரிய
செல்வம் வந்தாலும் இல்லறம் ஆகாது.

     (கருத்து) எப்பொருளும் அதனைச் சிறப்பிக்கக்கூடிய ஒன்று
இல்லாவிடின் மேன்மையுறாது.                           (63)

        64. அளக்க இயலாதவை

வாரியா ழத்தையும் புனலெறியும் அலைகளையும்
     மானிடர்கள் சனனத்தையும்
மன்னவர்கள் நினைவையும் புருடர்யோ கங்களையும்
     வானின்உயர் நீளத்தையும்

பாரில்எழு மணலையும் பலபிரா ணிகளையும்
     படியாண்ட மன்ன வரையும்
பருப்பதத் தின்நிறையும் ஈசுரச் செயலையும்
     பனிமாரி பொழி துளியையும்