பக்கம் எண் :

106

     (அருஞ் சொற்கள்) வாரி - கடல், வாரிசம் (வட) - தாமரை. படி -
உலகு பருப்பதம் (வட) - மலை. தெரிவையர் - பெண்கள்.

     (கருத்து) இங்குக் கூறப்பட்டவை அளவிட்டுரைக்க முடியாதவை.
                                                 (64)

      65. பிறர் மனைவியை நயவாதே

தம்தாரம் அன்றியே பரதார மேல்நினைவு
     தனைவைத்த காமுகர்க்குத்
தயையில்லை நிசமில்லை வெட்கமிலை சமரினில்
     தைரியம் சற்றுமில்லை

அம்தாரம்இல்லைதொடர் முறையில்லை நிலையில்லை
     அறிவில்லை மரபுமில்லை
அறம்இல்லை நிதியில்லை இரவினில் தனிவழிக்
     கச்சமோ மனதில்இல்லை

நந்தாத சனம்இல்லை இனம் இல்லை எவருக்கும்
     நட்பில்லை கனதையில்லை
நயம்இல்லை இளமைதனில் வலிமையிலை முத்திபெறும்
     ஞானம்இலை என்பர்கண்டாய்

மந்தார பரிமள சுகந்தாதி புனையுமணி
     மார்பனே அருளாளனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மந்தாரம் பரிமள சுகந்தம் ஆதிபுனையும் அணிமார்பனே -
மந்தாரப்பூவையும் வாசனை வீசுகின்ற கலவைச் சந்தனம் முதலியவற்றையும்
அணியாகக் கொள்கின்ற அழகிய மார்பை உடையவனே!, அருள் ஆளனே!
- அருளை உடையவனே!, மயிலேறி .........குமரேசனே!-, தம்தாரம் அன்றியே
பரதாரம்மேல் நினைவுதனை வைத்த காமுகர்க்கு - தம் மனைவியே
அல்லாமல் பிறர் மனைவிமேல் நினைவாய் இருக்கின்ற காமிகளுக்கு, தயை
இல்லை - இரக்கம் இல்லை; நிசம் இல்லை - உண்மை இல்லை; வெட்கம்