பக்கம் எண் :

107

இலை - நாணம் இல்லை; சமரினில் தைரியம் சற்றும் இல்லை - போரிலே
அஞ்சாமை சிறிதும் இல்லை; அம்தாரம் இல்லை - அழகிய தன் மனைவி
இல்லை ; தொடர்முறை இல்லை - மற்றவர்களோடு சம்பந்தம் இல்லை; நிலை
இல்லை - உறுதி இல்லை; அறிவு இல்லை -; மரபும் இல்லை - மரபுநெறியும்
இல்லை; அறம் இல்லை - ஒழுக்கம் இல்லை; நிதி இல்லை - செல்வம்
இல்லை; இரவினில் தனிவழிக்கு அச்சமோ மனதில் இல்லை - இரவினிலே
தனிவழியே செல்வதற்கு மனதில் அச்சம் இல்லை; நந்தாத சனம் இல்லை -
கெடாத மக்களுறவு இல்லை; இனம் இல்லை - உறவு இல்லை; எவருக்கும்
நட்பு இல்லை - யாரிடத்திலும் நட்பு இல்லை; கனதை இல்லை - மதிப்பு
இல்லை; நயம் இல்லை - வாழ்க்கையில் இனிமை இல்லை; இளமைதனில்
வலிமை இலை - இளமையில் வலிவு இல்லை; முத்திபெறும் ஞானமிலை -
வீட்டை அடையும் அறிவு இல்லை; என்பர் - என்று பெரியோர் கூறுவார்கள்.

     (விளக்கவுரை) கண்டாய்: அசைநிலையாகப் பொருள் இல்லாமல்
நின்றது.

     (அருஞ்சொற்கள்) கனதை (வட) - பெருமை. நந்துதல் - கெடுதல்.
சில இடங்களில் ‘ஆக்கம்' என்றும் பொருள்படும்.

     (கருத்து) பிறர் மனைவியை விரும்பிய காமுகர்கட்கு
இவையெல்லாம் இல்லை என்று கூறுவார்கள்.                 (65)

        66. மானம் காத்தல்

கனபாரம் ஏறினும் பிளந்திடுவ தன்றியே
     கற்றூண் வளைந்திடாது
கருதலர்க ளால்உடைந் தாலும்உயிர் அளவிலே
     கனசூரன் அமரில்முறியான்

தினமும்ஓர் இடுக்கண்வந் துற்றாலும் வேங்கைதோல்
     சீவன்அள வில்கொடாது
திரமான பெரியோர்கள் சரீரங்கள் போகினும்
     செப்பும்முறை தவறிடார்கள்