|
வனம்ஏறு
கவரிமான் உயிர்போகும் அளவும்தன்
மயிரின்ஒன் றும்கொடாது
வாராத ஆபத்து வருகினும் கற்புடைய
மாதுநிறை தவறிநடவாள்
மனதார
உனதடைக் கலமென்ற கீரற்கு
வன்சிறை தவிர்த்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
மனது ஆர உனது அடைக்கலம்
என்ற கீரற்கு வன்சிறை
தவிர்த்த முருகா! - தன்மனம் பொருந்தும்படி ‘உனக்கு அடைக்கலம் நான்'
என்று கூறிய நக்கீரருக்கு உண்டாகிய கொடிய சிறைவாசத்தைப்
போக்கியருளிய முருகனே!, மயிலேறி.......குமரேசனே!-, கனபாரம் ஏறில்
பிளந்திடுவது அன்றியே கல்தூண் வளைந்திடாது - அதிக சுமை ஏறினாலும்
பிளப்பது அல்லாமல் கல்தூண் வளையாது; கருதலர்களால் உடைந்தாலும்
உயிர் அளவிலே கனசூரன் அமரில் முறியான் - பகைவர்களால்
தோல்வியடைய நேர்ந்தாலும் அதிக வீரம் பொருந்திய ஒருவன் உயிர்விடும்
வரையில் போரில் பின்னடைய மாட்டான்; தினம்ஓர் இடுக்கண் வந்து
உற்றாலும் வேங்கைதோல் சீவன் அளவில் கொடாது - ஒவ்வொருநாளும்
ஒவ்வொரு துன்பம் வந்து அடைந்தாலும் புலியானது தன்தோலை உயிர்விடும்
வரையில் கொடாது; திரமான பெரியோர்கள் சரீரங்கள் போகினும்
செப்புமுறை தவறிடார்கள் - உறுதிவாய்ந்த பெரியோர்கள் உடல்
அழிவதானாலும் சொல்லுகின்ற முறையில் தவறி நடவார்கள்; வனம்ஏறு
கவரிமான் உயிர்போகும் அளவும் தன் மயிரின் ஒன்றும் கொடாது - காட்டில்
உலவுகின்ற கவரிமான் ஆனது உயிர்போகின்ற அளவிலும் தன் மயிரில்
ஒன்றையும் இழவாது; வாராத ஆபத்து வருகினும் கற்புடைய மாது நிறைதவறி
நடவாள் - வரக்கூடாத துன்பம் வந்தபோதிலும் கற்புடைய பெண்
கற்புநெறியிலிருந்து தவறிநடக்கமாட்டாள்.
|