பக்கம் எண் :

109

     (அருஞ்சொற்கள்) கருதலர்கள் - பகைவர்கள். இடுக்கண் - துன்பம்.
நிறை - கற்பு.

     (கருத்த) வாராத துன்பம் வந்தாலும் இவர்கள் தங்கள் பெருமையைக்
காப்பார்கள்.                                            (66)

         67. திருவருட் சிறப்பு

திருமகள் கடாட்சம்உண் டானால் எவர்க்கும்
     சிறப்புண்டு கனதையுண்டு
சென்றவழி யெல்லாம் பெரும்பாதை ஆய்விடும்
     செல்லாத வார்த்தைசெல்லும்

பொருளொடு துரும்புமரி யாதைஆம் செல்வமோ
     புகல்பெருக் காறுபோல் ஆம்
புவியின்முன் கண்டுமதி யாதபேர் பழகினவர்
     போலவே நேசம்ஆவார்

பெருமையொடு சாதியில் உயர்ச்சிதரும் அனுதினம்
     பேரும்ப்ர திட்டையுண்டாம்
பிரியமொடு பகையாளி கூடவுற வாகுவான்
     பேச்சினிற் பிழைவராது

வருமென நினைத்தபொருள் கைகூடி வரும்அதிக
     வல்லமைகள் மிகவும்உண்டாம்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மயிலேறி - குமரேசனே!-, எவர்க்கும் திருமகள் கடாட்சம்
உண்டானால் சிறப்பு உண்டு - யாவருக்கும் இலக்குமியின் அருள் ஏற்பட்டால்
கீர்த்தியுண்டு; கனதை உண்டு - பெருமை உண்டு; சென்றவழி எல்லாம்
பெரும்பாதை ஆய்விடும் - போன நெறி யாவும் எவரும் பின்பற்றும் பெரிய
நெறியாகிவிடும்; செல்லாத வார்த்தை செல்லும் - ஏற்றுக்கொள்ளத்தகாத
சொற்களும் (பிறரால்) ஏற்றுக்கொள்ளப்படும்; பொருள் ஒரு துரும்பு -
எப்பொருளும்