பக்கம் எண் :

110

எளிதிற் கிடைக்கும்; மரியாதைஆம் - பிறர்போற்றுஞ் சிறப்புக்கிடைக்கும்;
செல்வமோ புகல் பெருக்கு ஆறுபோல்ஆம் - செல்வமும்(பிறர்)
புகழ்ந்துகூறும் (அளவில்) வெள்ளம் மிகுந்த ஆற்றைப்போல (வடியாது)
பெருகும்; புவியில்முன்கண்டு மதியாதபேர் பழகினவர்போலவே நேசம்
ஆவர் - உலகில் தாம் வறியராயிருந்தபோது பார்த்து மதிப்புக்கொடாதவர்க
ளெல்லோரும் (இப்போது) பழகியவர்போல நட்புக்கொள்வர்; சாதியில்
பெருமையொடு உயர்ச்சிதரும் - சாதியிலும் மேன்மையும் உயர்வும்
உண்டாகும்; அனுதினமும் பேரும் பிரதிட்டை உண்டாம் - எந்நாளும்
புகழும் வரவேற்பும் கிடைக்கும்; பகையாளிகூட பிரியமொடு உறவாகுவான் -
பகைவனும் அன்போடு நட்புக்கொண்டாடுவான்; பேச்சினில் பிழைவராது -
பேசும் போது பிழையில்லாத பேச்சு வரும்; வரும் என நினைத்த பொருள்
கைகூடிவரும் - வரவேண்டுமென்று எண்ணிய பொருள் தவறாமற் கிடைக்கும்;
அதிக வல்லமைகள் மிகவும் உண்டாம் - எடுத்த தொழிலை முடிக்கும்
பேராற்றல் மிகுதியாக உண்டாகும்.

     (அருஞ் சொற்கள்) பிரதிட்டை (வட) வரவேற்பு. பெருக்கு -
வெள்ளம். திரு-செல்வம். செல்வத்தின் தெய்வம் திருமகள்.

     (கருத்து) திருமகளின் அருளால் யாவும் கிடைக்கும்.       (67)

         68. நட்புநிலை

கதிரவன் உதிப்பதெங் கேநளினம் எங்கே
     களித்துளம் மலர்ந்ததென்ன
கார்மேகம் எங்கே பசுந்தோகை எங்கே
     கருத்தில்நட் பானதென்ன

மதியம்எங் கேபெருங் குமுதம்எங் கேமுகம்
     மலர்ந்துமகிழ் கொண்டதென்ன
வல்லிரவு விடிவதெங் கேகோழி எங்கே
     மகிழ்ந்துகூ விடுதல்என்ன