பக்கம் எண் :

112

     (அருஞ்சொற்கள்) காண் : முன்னிலையசைச்சொல். வாவி - குளம்.
சோணாடு : மரூஉ. நளினம் - தாமரை. தோகை : சினையாகுபெயர். மதியம்
- திங்கள். குமுதம் - அல்லி.

     (கருத்து) அன்புக்கு எல்லையில்லை.                  (68)

          69. காலம் அறிதல்

காகம் பகற்காலம் வென்றிடும் கூகையைக்
     கனகமுடி அரசர்தாமும்
கருதுசய காலமது கண்டந்த வேளையில்
     காரியம் முடித்துவிடுவார்

மேகமும் பயிர்காலம் அதுகண்டு பயிர்விளைய
     மேன்மேலும் மாரிபொழியும்
மிக்கான அறிவுளோர் வருதருண காலத்தில்
     மிடியாள ருக்கு தவுவார்

நாகரிகம் உறுகுயில் வசந்தகா லத்திலே
     நலம்என் றுகந்துகூவும்
நல்லோர் குறித்ததைப் பதறாமல் அந்தந்த
     நாளையில் முடிப்பர்கண்டாய்

வாகனைய காலைகல் மாலைபுல் எனும்உலக
     வாடிக்கை நிசம்அல்லவோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மயிலேறி...........குமரேசனே!-, காகம் கூகையைப் பகற்காலம்
வென்றிடும் - காகம் கோட்டானைப் பகற்காலத்திலே வெல்லும்; கனகமுடி
அரசர் தாமும் கருது சயகாலமது கண்டு அந்த வேளையில் காரிய
முடித்துவிடுவார் - பொன்முடி புனைந்த மன்னர்களும் அவ்வாறே
தங்களுக்கு வெற்றியுண்டாகும் காலத்தை அறிந்து பகையைவென்றிகொள்வர்;
மேகமும் கார்காலமது கண்டு பயிர் விளைய மேன்மேலும் மாரி பொழியும் -
முகிலும் மழைக்