காலத்திலே பயிர்கள்
விளைவதற்குத் தொடர்ச்சியாக மழைபெய்யும்;
மிக்கான அறிவுளோர் மிடியாளருக்குத் தருணம் வருகாலத்தில் உதவுவார் -
பேரறிவாளர் வறியருக்குக் காலம் அறிந்து பொருளுதவி செய்வார்; நாகரிகம்
உறுகுயில் வசந்த காலத்திலே நலம் என்று உகந்து கூவும் - அழகிய குயில்
வேனிற்காலமே நல்லதென்று விரும்பிக் கூவும்; நல்லோர் குறித்ததைப்
பதறாமல் அந்த அந்த நாளையில் முடிப்பர் - நல்லறிவாளர் தாம்
நினைத்ததை அமைதியாக அவ்வக்காலத்திலே நிறைவேற்றிக் கொள்வர்;
வாகுஅனைய காலை கல் - அழகிய இளமை (அறம்புரிய) உறுதியானதாகும்;
மாலைபுல் - முதுமைப்பருவம் (அறம்புரிய) அற்பம் ஆனதாகும்; எனும்
உலக வாடிக்கை நிசம் அல்லவோ? - என்று கூறும் உலகியல்மொழி
உண்மையானதன்றோ?
(விளக்கவுரை)
‘பகல்வெல்லும் கூகையைக் காக்கை; இகல் வெல்லும்
- வேந்தர்க்கு வேண்டும்பொழுது' என்னும் திருக்குறள் கருத்து இங்கே
வந்துளது. வசந்தகாலம் : இளவேனில் முதுவேனில் எனப்படும் சித்திரை,
வைகாசி, ஆனி, ஆடித்திங்கள்கள், ‘காலை கல்; மாலை புல்' என்பது
பழமொழி.
(கருத்து)
காலமறிந்து
தொழில்புரியவேண்டும். (69)
70.
இடம் அறிதல்
தரையதனில்
ஓடுதேர் நீள்கடலில் ஓடுமோ
சலதிமிசை ஓடுகப்பல்
தரைமீதில் ஓடுமோ தண்ணீரில் உறுமுதலை
தன்முன்னே கரிநிற்குமோ
விரைமலர்
முடிப்பரமர் வேணிஅர வினைவெல்ல
மிகுகருட னால்ஆகுமோ
வேங்கைகள் இருக்கின்ற காடுதனில் அஞ்சாமல்
வேறொருவர் செல்லவசமோ
|
|