பக்கம் எண் :

115

     (அருஞ்சொற்கள்) சலதி (வட) - கடல். கரி - யானை. விரை -
மணம். வேணி - சடை. வரை - மூங்கில். மூங்கிலாற் செய்த குழல்
வேய்ங்குழல் எனப்படும்.

     (கருத்து) அவரவர்க்கு ஏற்ற இடத்திலிருப்பதே நல்லது.   (70)

         71. யாக்கை நிலையாமை

மனுநல்மாந் தாதாமுன் ஆனவர்கள் எல்லோரும்
     மண்மேல் இருந்துவாழ்ந்து
மடியாதிருந்தபேர் இல்லைஅவர் தேடியதை
     வாரிவைத் தவரும்இல்லை

பனியதனை நம்பியே ஏர்பூட்டு கதையெனப்
     பாழான உடலைநம்பிப்
பார்மீதில் இன்னும்வெகு நாளிருப் போம்என்று
     பல்கோடி நினைவையெண்ணி

அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல்
     அன்பாக நின்பதத்தை
அர்ச்சித்து முத்திபெறல் வேண்டுமென் றெண்ணார்கள்
     ஆசைவலை யிற்சுழலுவார்

வனிதையர்கள் காமவி காரமே பகையாகும்
     மற்றும்ஒரு பகையும்உண்டோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மயிலேறி...........குமரேசனே!-; மனுநல் மாந்தாதா முன்
ஆனவர்கள் எல்லாரும் - மனு என்னும் அரசனும் நற்குணமுடைய மாந்தாதா
முதலானவர்கள் எல்லாரும், மண்மேல் இருந்து வாழ்ந்தும் மடியாதிருந்தபேர்
இல்லை - மண்ணுலகில் நீண்டநாள் இருந்து வாழ்ந்தாலும் இறவாமல்
இருந்தவர்கள் எவரும் இல்லை; தேடியதை வாரி வைத்தவரும் இல்லை-
(சிறிது சிறிதாக) சேர்த்தபொருளைத் (தம்முடன் எடுத்துச்செல்ல)
அள்ளிவைத்தவர்களும்