இல்லை; பனியதனை நம்பியே
ஏர்பூட்டு கதையென - பனி பெய்ததால்
ஈரமிருக்கும் என்று நம்பிக்கை வைத்து ஏரைப் பூட்டும் அறிவின்மைபோல,
பாழான உடலை நம்பி - அழியும் உடலை (நிலையானது என்று)
நம்பிக்கைகொண்டு பார்மீதில் இன்னும் வெகுநாள் இருப்போம் என்று -
உலகிலே மேலும் நீண்டகாலம் வாழ்வோம் என, பல்கோடி நினைவை
எண்ணி - பல கோடிக்கணக்கான நினைவுகொண்டு, அனிதமாய் விருதாவில்
மாய்வதே அல்லாமல் - நெறிகெட்டு வீணில் இறப்பதே அன்றி, அன்பாக
நின்பதத்தை அர்ச்சித்து - அன்புடன் உன் திருவடியில் மலரிட்டு வணங்கி,
முத்தி பெறல்வேண்டும் என்று எண்ணார்கள் - வீடு அடையவேண்டும் என
நினையார்கள்; ஆசைவலையில் சுழலுவார் - ஆசையாகிய வலையில்
அகப்பட்டுத் திகைப்பார்கள்; வனிதையர்கள் காமவிகாரமே பகையாகும் -
(அவர்களுக்குப்) பெண்களைக் காமநோக்குடன் பார்ப்பதே கெடுதி தரும்;
மற்றும் ஒரு பகைமை உண்டோ? - வேறொரு பகை இல்லை.
(விளக்கவுரை)
மனு
: மனிதர்களின் முதல் தந்தை. மாந்தாதா : ஒரு
சிறந்த அரசன்.
(கருத்து)
உடலுள்ளபோதே அறம்புரிந்து நன்மையடைய வேண்டும். (71)
72.
வேட்டக நிலை
வேட்டகந்
தன்னிலே மருகன்வந் திடுமளவில்
மேன்மேலும் உபசரித்து
விருந்துகள் சமைத்துநெய் பால்தயிர் பதார்த்தவகை
வேண்டுவ எலாமமைப்பார்
ஊட்டமிகு வர்க்கவகை செய்திடுவர் தைலம்இட்
றுறுதியாய் முழுகுவிப்பார்
ஓயாது தின்னவே பாக்கிலை கொடுத்திடுவர்
உற்றநாள் நாலாகிலோ
|
|