பக்கம் எண் :

9

மாதவர் செய்தவமும் - பெரிய தவசிகள் செய்யும் தவமும், மறையோர்களாலே
விளங்கும் - மறையை ஓதும் அந்தணர்களாலே விளக்கமுறும், இவர் மானிடத்
தெய்வம் - இவர்கள் மக்களிலே சிறந்தவர்கள்.

     (விளக்கவுரை) காயத்திரி (வடமொழி) - ஞாயிற்றை வழிபடும்
மந்திரம். சுருதி (வடமொழி) - கேட்கப்படுவது. கோது - பிழை, ஆகமம்
(வடமொழி) - மறையின் அங்கம். புராணம் - பழைமை. யாகம் (வடமொழி)
- வேள்வி. முளரி (வடமொழி) - நெருப்பு, தகிப்பார் (வடமொழி) -
அழிப்பார். மூர்த்தம் (வடமொழி) - நிலை.

     (கருத்து) அந்தணர்கள் முறையாகக் குலமுறைப்படி நடந்தால்
நாட்டுக்கு நன்மை யுண்டாகும்.                        (2)

         3. அரசர் இயல்பு

குடிபடையில் அபிமானம், மந்திரா லோசனை,
     குறிப்பறிதல், சத்யவசனம்,
கொடைநித்தம் அவரவர்க் கேற்றமரி யாதை பொறை,
     கோடாத சதுருபாயம்

படிவிசா ரணையொடுப்ர தானிதள கர்த்தரைப்
     பண்பறிந் தேயமைத்தல்,
பல்லுயி ரெலாந்தன் உயிர்க்குநிக ரென்றே
     பரித்தல், குற்றங்கள்களைதல்,

துடிபெறு தனக்குறுதி யானநட்பகமின்மை,
     சுகுணமொடு, கல்வியறிவு,
தோலாத காலம்இடம் அறிதல், வினை வலிகண்டு
     துட்டநிக் ரகசௌரியம்,

வடிவுபெறு செங்கோல் நடத்திவரும் அரசர்க்கு
     வழுவாத முறைமையிதுகாண்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!