பக்கம் எண் :

118

போல நினைப்பள்; அவன் மட்டியிலும் மட்டி அன்றோ? (ஆகையால்)
அவன் பேதையிலும் பேதை அல்லனோ?

     (அருஞ்சொற்கள்) வேட்டல் - விரும்புதல்: மணம்புரிதல் உறுதி
- நன்மை; திண்மையும்ஆம்.

     (கருத்து) ‘விருந்தும் மருந்தும் மூன்றுநாள்.'             (72)

      73. செல்வம் நிலையாமை

ஓடமிடும் இடமது மணல்சுடும் சுடும்இடமும்
     ஓடம்மிக வேநடக்கும்
உற்றதோர் ஆற்றின்நடு மேடாகும் மேடெலாம்
     உறுபுனல்கொள் மடுவாயிடும்

நாடுகா டாகும்உயர் காடுநா டாகிவிடும்
     நவில்சகடு மேல்கீழதாய்
நடையுறும் சந்தைபல கூடும்உட னேகலையும்
     நல்நிலவும் இருளாய்விடும்

நீடுபகல் போயபின் இரவாகும் இரவுபோய்
     நிறைபகற் போதாய்விடும்
நிதியோர் மிடித்திடுவர் மிடியோர் செழித்திடுவர்
     நிசமல்ல வாழ்வுகண்டாய்

மாடுமனை பாரிசனம் மக்கள்நிதி பூடணமும்
     மருவுகன வாகும் அன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மயிலேறி...............குமரேசனே!-, ஓடம் இடும் இடமது மணல்
சுடும் - ஓடத்தை வைத்திருக்கும் (நீர்நிறைந்த பள்ளமான) இடம் (நீர்வற்றி)
மணல் சுடும்படி (மேடாக) மாறும்; சுடும் இடமும் ஓடம் மிக நடக்கும் -
(மேடாகிய) மணல் சுடும்படியான இடமும் (பள்ளமாகி நீர் நிறைவாய்) ஓடம்
மிகுதியாக ஓடும்; உற்றது ஓர் ஆற்றின்மடு மேடாகும் - நீருள்ள ஓராற்றின்
பள்ளம் மேடாக