மாறும்; மேடு எலாம்
உறுபுனல்கொள் மடுஆயிடும் - மேடுகள் யாவும்
மிகுதியான நீரைக்கொண்ட மடுவாக மாறிவிடும்; நாடு காடாகும் -
(மக்களிருக்கும்) நாடு (விலங்குகள் வாழும்) காடாகும்; உயர்காடு நாடு
ஆகிவிடும் - (மரங்கள்) உயர்ந்த காடு (மக்களிருக்கும்) நாடாக மாறி விடும்;
நவில் சகடு மேல்கீழதாய் நடையுறும் - சொல்லப்படும் (வண்டியின்) ஆழி
மேலுங்கீழுமாக மாறிமாறிச் சுற்றிக்கொண்டு செல்லும்; பலசந்தை கூடும்
உடனே கலையும் - பலவகைச் சந்தைகளும் கூடுவதும் கலைவதுமாகவே
இருக்கும்; நல்நிலவும் இருளாய்விடும் - நல்ல நிலவின் ஒளியும் (மாறி)
இருளாகிவிடும்; நீடுபகல் போயபின் இரவாகும் - பெரிய பகல் கழிந்து இரவு
வரும்; இரவுபோய் நிறைபகற்போதாய் விடும் - இரவுநீங்கி ஒளிநிறைந்த
பகற்காலம் வந்துவிடும்; நிதியோர் மிடித்திடுவர் - செல்வர் வறியராவர்;
மிடியோர் செழித்திடுவர் - வறியோர் செல்வராவர்; வாழ்வு நிசம் அல்ல -
(ஆகையால்) வாழ்க்கை நிலையானதன்று; மாடு மனை பாரி சனம் மக்கள்
நிதிபூடணமும் மருவுகனவு ஆகும் அன்றோ? - ஆநிரையும், வீடும்,
மனைவியும், உறவினரும், மக்களும், செல்வமும், அணிகலன்களும் கனவைப்
போலவே மாறிவிடும் அன்றோ?
(அருஞ்சொற்கள்)
உறுபுனல்
- மிகுதியான நீர். மிடி - வறுமை. பாரி
(வட) மனைவி. பூடணம் (வட) அணிகலன்.
(கருத்து)
செல்வம்
நிலையற்றது. ஆகையால், அது உள்ளபோதே
அறம்பல புரிக. (73)
74.
பிறந்தோர் பெறவேண்டிய பேறு
சடம்ஒன்
றெடுத்தால் புவிக்குநல் லவனென்று
தன்பேர்வி ளங்கவேண்டும்
சதிருடன் இதல்லாது மெய்ஞ்ஞானி என்றவ
தரிக்கவே வேண்டும்அல்லால்
திடம்இனிய
ரணசூர வீரன்இவன் என்னவே
திசைமெச்ச வேண்டும்அல்லால்
|
|