தேகியென
வருபவர்க் கில்லையென் னாமலே
செய்யவே வேண்டும்அல்லால்
அடைவுடன்
பலகல்வி ஆராய்ந்து வித்துவான்
ஆகவே வேண்டும்அல்லால்
அறிவினால் துரைமக்கள் ஆகவர வேண்டும்இவர்
அதிகபூ பாலர்ஐயா
வடகுவடு
கிடுகிடென எழுகடலும் அலையெறிய
மணிஉரகன் முடிகள்நெரிய
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
வடகுவடு கிடுகிடு
என - வடக்கிலுள்ள இமயமலை அதிரவும்,
எழுகடலும் அலையெறிய - ஏழுகடல்களும் பொங்கி அலைமோதவும், உரகன்
மணிமுடிகள் நெரிய - ஆதிசேடனின் மாணிக்கமுடிகள் நெரியவும்,
மயிலேறி.....குமரேசனே!-, ஐயா - ஐயனே!, சடம் ஒன்று எடுத்தால் - ஓருடல்
எடுத்தால், புவிக்கு நல்லவன் என்று தன்பேர் விளங்கல்வேண்டும் -
உலகிற்கு நல்லவன் எனத் தன் பெயர் விளக்கமுறுதல் வேண்டும்; இது
அல்லாது சதிருடன் மெய்ஞ்ஞானி என்று அவதரிக்க வேண்டும் - இஃது
அன்றேல் திறமையுடன் உண்மையான அறிவாளி என்று தோற்றம்
உறல்வேண்டும்; அல்லால் - அன்றேல், திடம்இனிய ரணசூரவீரன் இவன்
என்னவே திசைமெச்சவேண்டும் - வலிமைமிக்கவனாகிப் போர்க்களத்திலே
அச்சமுண்டாக்குபவனும் அஞ்சாமையுள்ளவனும் இவன் என்னும்படி
திக்கெலாம் புகழப்படல்வேண்டும்; அல்லால் - அன்றேல், தேகி என
வருபவர்க்கு இல்லையென்னாமலே செய்யவேவேண்டும் - ஈ என்று வந்து
இரப்பவர்க்கு இல்லையென்னாமற் கொடுத்திடல்வேண்டும்; அல்லால் -
அன்றேல், அடைவுடன் பலகல்வி ஆராய்ந்து வித்துவான் ஆகவே வேண்டும்
- ஒழுங்காகப் பல கலைகளையும் ஆராய்ச்சி செய்து புலவனாகவேண்டும்;
அல்லால் - அன்றேல், அறிவினால் துரைமக்கள் ஆகவரவேண்டும் -
அறிவின் திறமையால்
|