தலைவர்களாக வருதல்வேண்டும்;
இவர் அதிக பூபாலர் - இத்தகையோர்
சிறந்த உலகமுதல்வர் ஆவர்.
(விளக்கவுரை)
உரகன் - பாம்பு; இங்கு ஆதிசேடன் என்னும்
பாம்பைக் குறிக்கிறது. ஆதிசேடன் தன் மணிமுடியிலே உலகைத்
தாங்குகிறான் என்று கூறுவது புராண வழக்கு. சதிர் - திறமை. இரணம்
(வட) - புண்; இங்குப்போர்செய்யும் இடத்தைக் குறிக்கிறது. சூர் - அச்சம்.
போர் செய்யும்போது கண்டோர் அஞ்சும் நிலையிலே காணப்படுவோன்
சூரன். வீரன் - அஞ்சாமை. தேகி(வட) - கொடு. தியாகம் - கொடுத்தல்.
துரை - தலைவன்.
(கருத்து)
உலகிற் புகழ்பெற ஏதாயினும் ஒரு நெறியிலே சிறப்புறுதலே
மக்கட்பிறவியின் பயன். (74)
75.
வேசையர்
தேடித்தம்
வீட்டிற் பணக்காரர் வந்திடின்
தேகசீ வன்போலவே
சிநேகித்த உம்மையொரு பொழுதுகா ணாவிடின்
செல்லுறா தன்னம்என்றே
கூடிச்
சுகிப்பர்என் ஆசைஉன் மேல்என்று
கூசாமல் ஆணையிடுவார்
கொங்கையை வெடிக்கப் பிடிக்கக் கொடுத்திதழ்
கொடுப்பர்சும் பனம்உகப்பர்
வேடிக்கை
பேசியே சைம்முதல் பறித்தபின்
வேறுபட நிந்தைசெய்து
விடவிடப் பேசுவர் தாய்கலகம் மூட்டியே
விட்டுத் துரத்திவிடுவார்
வாடிக்கை
யாய்இந்த வண்டப் பரத்தையர்
மயக்கத்தை நம்பலாமோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
மயிலேறி...........குமரேசனே!-,
தம் வீட்டில் பணக்காரர்
தேடிவந்திடின் - தம் வீட்டினைத்தேடிச்
|