செல்வர்கள் வந்தால்,
தேகசீவன்போலவே சினேகித்த உம்மை - உடலும்
உயிரும்போல் நட்புக்கொண்ட தங்களை, ஒருபொழுது காணாவிடின்
அன்னம் செல்லுறாது - ஒரு வேளை பாராவிடின் உணவு
ஏற்றுக்கொள்வதில்லை; என்றே - எனவே கூறி, கூடிச்சுகிப்பர் - கலந்து
மகிழ்வர்; என் ஆசை உன்மேல் என்று கூசாமல் ஆணையிடுவர் - என்
காதல் உனக்கே என்று மனங்கூசாமற் பொய்யாணையிடுவார்கள்;
கொங்கையை வெடிக்கப் பிடிக்கக் கொடுத்திடுவர் - மார்பைத் திறந்து
பற்றும்படி கொடுப்பார்கள்; இதழ் கொடுப்பர் - இதழ் பருக அளிப்பர்;
சும்பனம் உகப்பர் - சும்பனம் என்னும் கரணத்தை விரும்பிச்செய்வர்;
வேடிக்கைபேசியே கைமுதல் பறித்தபின் - இனிமையாகப்பேசிக் கையிலுள்ள
செல்வத்தைப் பற்றிய பிறகு, வேறுபட நிந்தைசெய்து - மனம்வெறுக்கப்
பழித்து, விடவிடப் பேசுவர் - மாறிமாறித் தூற்றுவர்; தாய் கலகம் மூட்டியே
விட்டுத் ரத்திவிடுவார்- தாய்க்கிழவியைக்கொண்டு கலகம் உண்டாக்கி
வீட்டை விட்டுத் துரத்துவார்கள்; இந்த வண்டப் பரத்தையர் மயக்கத்தை
வாடிக்கையாய் நம்பலாமோ? - இந்த இழிந்த வேசையரின் மயக்கந்ததருங்
காமச்செயல்களை வழக்கமாக நிலையென நம்பல்கூடுமோ?
(கருத்து)
காதலை
விரும்பாமற் பணத்தை விரும்பும் வேசையரின்
நட்பு வேண்டாம். (75)
76.
உறுதி
கைக்குறுதி
வேல்வில் மனைக்குறுதி மனையாள்
கவிக்குறுதி பொருளடக்கம்
கன்னியர் தமக்குறுதி கற்புடைமை சொற்குறுதி
கண்டிடில் சத்யவசனம்
மெய்க்குறுதி
முன்பின் சபைக்குறுதி வித்வசனம்
வேசையர்க் குறுதிதேடல்
விரகருக் குறுதிபெண் மூப்பினுக் குறுதிஊண்
வீரருக் குறுதிதீரம்
|
|