பக்கம் எண் :

123

செய்க்குறுதி நீர்அரும் பார்க்குறுதி செங்கோல்
     செழும்படைக் குறுதிவேழம்
செல்வந் தனக்குறுதி பிள்ளைகள் நகர்க்குறுதி
     சேர்ந்திடும் சர்ச்சனர்களாம்

மைக்குறுதி யாகிய விழிக்குற மடந்தைசுர
     மங்கைமரு வுந்தலைவனே
மயிலேறி விளையாடு குகனேபுல்! வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மைக்கு உறுதியாகிய விழி குறமடந்தை சுரமங்கை மருவும்
தலைவனே! - மைக்கு அழகு செய்யும் விழிகளையுடைய குறமங்கை
(வள்ளியம்மை)யும், தேவயானையும் விரும்பும் மணவாளனே!,
மயிலேறி........குமரேசனே! - , கைக்கு உறுதி வேல் வில் - (வீரன்) கைக்கு
நலந்தருவன வேலும் வில்லும்; மனைக்கு உறுதி மனையாள் - இல்லத்திற்கு
நலந்தருபவள் இல்லாள்; கவிக்கு உறுதி பொருள் அடக்கம் - செய்யுளுக்கு
நலந்தருவது பொருளிருத்தல்; கன்னியர் தமக்கு உறுதி கற்பு உடைமை -
பெண்களுக்கு நன்மை கற்புடன் இருத்தல்; சொற்கு உறுதி கண்டிடில்
சத்தியவசனம் - சொல்லுக்கு நன்மையை ஆராய்ந்தால் உண்மை கூறுதல்;
மெய்க்கு உறுதி முன்பின் - உடம்புக்கு நலந்தருவோர் தமயனுந் தம்பியும்;
சபைக்கு உறுதி வித்வசனம் - அவைக்களத்திற்கு நன்மை புலவர்
பெருமக்களிருத்தல்; வேசையருக்கு உறுதி தேடல் - பரத்தைகளுக்கு நன்மை
பொருளீட்டல்; விரகருக்கு உறுதி பெண் - காமுகருக்கு நலம் பெண்கள்;
மூப்பினுக்கு உறுதி ஊண் - முதுமைக்கு நலம் உணவு; வீரருக்கு உறுதி
தீரம் - வீரருக்கு நலம் அஞ்சாமை; செய்க்கு உறுதி நீர் - நிலத்திற்கு நலம்
நீர்; அரும் பார்க்கு உறுதி செங்கோல் - அரிய உலகிற்கு நன்மை நல்ல
ஆட்சி; செழும் படைக்கு உறுதி வேழம் - வளமிக்க படைக்கு நன்மை
யானைப்படை; செல்வம் தனக்கு உறுதி பிள்ளைகள் - செல்வத்திற்கு நன்மை
பிள்ளைகள்; நகர்க்கு உறுதி சேர்ந்திடும் சர்ச்சனர்கள் ஆம் - நகரத்திற்கு
நன்மை அங்கு வாழும் நல்லோர்களாகும்.