பக்கம் எண் :

125

விசாரமே அல்லாது - இழிவும் நீங்காத கவலையுமே அன்றி, சிந்தையில்
தைரியம் இல்லை - உள்ளத்தில் வீரம் இராது; செய்ய சபைதன்னிலே
சென்றுவர வெட்கம்ஆம் - நல்ல சபையிலே போய்வர நாணமுண்டாகும்;
செல்வரைக் காணில் நாணும் - பணமுடையோரைக் கண்டால் உள்ளம்
வெட்கமடையும், உறுதிபெறு வீரமும் குன்றிடும் - நன்மை தரும் வீரமும்
குறைந்துவிடும்; விருந்துவரின் உயிருடன் செத்த பிணம்ஆம் - விருந்தினர்
வந்தால் உயிருடன் இறந்த பிணமாக நேரும்; உலகம் பழித்திடும் -
உலகத்தார் இகழ்வர்; பெருமையோர் முன்புசென்று ஒருவரொரு செய்தி
சொன்னால் மறுவசனமும் சொல்லார் - பெருமையுடையோர் எதிரிற்போய்
ஒரு வறுமையுடைய ஒருவர் ஒரு செய்தியைக் கூறினால் மறுமொழியும்
விளம்பார்; துன்பினில் துன்பம் இதுவந்து அணுகிடாது அருளுவாய் -
துன்பத்திலே துன்பமான இவ்வறுமை (ஒருவருக்கும்) வந்து சேராமல்
அருள்செய்வாய்.

     (கருத்து) வறியவர் இவ்வுலகில் எவ்வகையினும் இன்பம் அடையார்.                                                      (77)

            78. தீய சார்பு

ஆனைதண் ணீரில்நிழல் பார்த்திடத் தவளைசென்
     றங்கே கலக்கிஉலவும்
ஆயிரம் பேர்கூடி வீடுகட் டிடில்ஏதம்
     அறைகுறளும் உடனேவரும்

ஏனைநற் பெரியோர்கள் போசனம் செயுமளவில்
     ஈக்கிடந் திசைகேடதாம்
இன்பமிகு பசுவிலே கன்றுசென் றூட்டுதற்
     கினியகோன் அது தடுக்கும்

சேனைமன் னவர்என்ன கருமநிய மிக்கினும்
     சிறியோர்க ளாற்குறைபடும்
சிங்கத்தை யும்பெரிய இடபத்தை யும்பகைமை
     செய்ததொரு நரியல்லவோ