பக்கம் எண் :

127

     ‘சிங்கமும் எருதும் நட்பாக இருந்தன. ஒரு நரி சிங்கத்தினிடம்
வீண்பழி சொல்லி நட்பைக்கெடுத்து எருதைக் கொன்று விடச் செய்தது' -
எனப் பஞ்சதந்திரக்கதை கூறும்.

     (கருத்து) தீயவர் சேர்க்கையால் எக்காரியமும் கெடும்.     (78)

    79. இடுக்கண் வரினும் பயன்படுபவை

ஆறுதண் ணீர்வற்றி விட்டாலும் ஊற்றுநீர்
     அமுதபா னம்கொடுக்கும்
ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும்
     அப்போதும் உதவிசெய்வன்

கூறுமதி தேய்பிறைய தாகவே குறையினும்
     குவலயத் திருள்சிதைக்கும்
கொல்லைதான் சாவிபோய் விட்டாலும் அங்குவரு
     குருவிக்கு மேய்ச்சலுண்டு

வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும்
     மிகநாடி வருபவர்க்கு
வேறுவகை இல்லையென் றுரையா தியன்றன
     வியந்துளம் மகிழ்ந்துதவுவான்

மாறுபடு சூரசங் காரகம் பீரனே
     வடிவேல் அணிந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மாறுபடு சூரசங்கார கம்பீரனே - பகைத்த சூரனைக் கொன்ற
வீரனே!, வடிவேல் அணிந்த முருகா - கூரிய வேலை யேந்திய முருகனே!,
மயிலேறி.............குமரேசனே!-, தண்ணீர் வற்றிவிட்டாலும் ஆறு ஊற்றுநீர்
அமுதபானம் கொடுக்கும் - தண்ணீர் வறண்டுபோயினும் ஆறு தன்
ஊற்றினாலே இனிய குடிநீரைத் தரும்; ஆதவனை ஒருபாதி கட்செவி
மறைத்தாலும் அப்போதும் உதவி செய்வன் - கதிரவனுடைய
அரைப்பகுதியைப் பாம்பு