பக்கம் எண் :

128

மறைத்தாலும் அந்நிலையிலும் கதிரவன் ஒளிதருவான்; கூறும் மதி
தேய்பிறையதாகவே குறையினும் குவலயத்து இருள் சிதைக்கும் -
சொல்லப்பட்ட திங்கள் தேய்பிறையாகக் குறைந்தாலும் உலகிலுள்ள இருளை
ஓட்டும்; கொல்லைதான் சாவிபோய்விட்டாலும் அங்குவரு குருவிக்கு
மேய்ச்சல் உண்டு - புன்செய் நிலம் விளைவின்றிப் பட்டுப்போனாலும்
அந்நிலத்திற்கு வரும் குருவிகளுக்குத் தீனி கிடைக்கும்; வீறுடன் உதாரிதான்
மிடியானபோதினிலும் - சிறப்புடன் கொடுப்போன் வறுமையுற்றாலும், மிகநாடி
வருபவர்க்கு - சாலவுந் தேடிவருவோர்களுக்கு, இல்லையென்று உரையாது
வேறுவகை இயன்றன வியந்து உளம்மகிழ்ந்து உதவுவான் - இல்லையென்று
கூறாமல் வேறுவகையிலே முடிந்த பொருள்களை வியப்புறும்படி
மனங்களித்துக் கொடுப்பான்.

     (விளக்கவுரை) ஞாயிற்றை இராகு எனும் பாம்பு மறைப்பதாகக்
கூறுவது புராணக்கதை. கட்செவி - பாம்பு (கண்ணே செவியாகவுமுடையது).
கொல்லை என்பது முல்லை நிலம்: இக்காலத்திற் புன்செய் என்கிறோம்.
காடும் காடுசார்ந்த இடமும் முல்லை. உதாரி (வட) - கொடையாளி. உதாரம்
- கொடை. மிடி - வறுமை. ‘வியந்து' என்பதற்கு ‘வியக்க' எனப் பொருள்
கூறல்வேண்டும். கம்பீரம் (வட). வீரத்தோற்றம் ‘இலன் என்னும் எவ்வம்
உரையாமை யீதல்-குலனுடையான் கண்ணே யுள' என்பது குறள்.

     (கருத்து) கொடைப்பண்புடையோர் தம் உயிரையும் ஈவரே ஒழிய
இல்லையென்று இயம்பார்.                          (79)

     80. இவர்க்கு இது இல்லை!

சார்பிலா தவருக்கு நிலையேது முதலிலா
     தவருக் கிலாபமேது
தயையிலா தவர்தமக் குறவேது பணமிலா
     தார்க்கேது வேசை உறவு

ஊர்இலா தவர்தமக் கரசேது பசிவேளை
     உண்டிடார்க் குறுதிநிலையே
துண்மையில் லாதவர்க் கறமேது முயல்விலார்க்
     குறுவதொரு செல்வமேது