சோர்விலா
தவருக்கு மற்றும்ஒரு பயம்ஏது
சுகம் இலார்க்காசையேது
துர்க்குணம் இலாதவர்க் கெதிராளி யேதிடர்செய்
துட்டருக் கிரக்கமேது
மார்புருவ
வாலிமேல் அத்திரம் விடுத்தநெடு
மால்மருக னானமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
வாலிமேல்
மார்பு உருவ அத்திரம் விடுத்த நெடுமால்
மருகனான முருகா - வாலியின் மார்பில் உருவும்படி அம்புவிடுத்த நீண்ட
உருவமுடைய திருமாலின் மருகனாகிய முருகனே!, மயிலேறி.........குமரேசனே!-,
சார்பு இலாதவருக்கு நிலை ஏது? - ஆதரவு இல்லாதவர்க்கு நிலையான
இடம் இல்லை; முதல் இலாதவருக்கு இலாபம் ஏது - முதற்பொருள்
வையாதவர்கட்கு ஊதியம் இல்லை; தயை இலாதவர் தமக்கு உறவு ஏது -
இரக்கம் இல்லாதவர்கட்கு உறவினர் இல்லை; பணம் இல்லாதவர்க்கு வேசை
உறவு ஏது - பொருள் இ்லாதவர்கட்குப் பரத்தையரின் நட்பு இல்லை; ஊர்
இலாதவர் தமக்கு அரசு ஏது - நாடு இல்லாதவர்கட்கு அரசாட்சியில்லை;
பசிவேளை உண்டிடார்க்கு உறுதிநிலையேது? - பசித்தகாலத்தில்
உண்ணாதவர் கட்கு நல்ல நிலையில்லை; உண்மையில்லாதவர்க்கு அறம் ஏது
- உண்மை பேசாதவர்க்கு அறம் இல்லை; முயல்வு இலாதவர்க்கு உறுவது
ஒரு செல்வம் ஏது - முயற்சியில்லாதவர்கட்குக் கிடைக்கக்கூடிய செல்வம்
இல்லை; சோர்வு இலாதவருக்கு மற்றும் ஒரு பயம் ஏது - களைப்பு
இல்லாதவர்கட்கு மேலும் வரக்கூடிய அச்சம் ஏதும் இல்லை; சுகம் இலார்க்கு
ஆசை ஏது? - உடல்நலம் அற்றவர்க்கு எப்பொருளினும் விருப்பம் இல்லை;
துர்க்குணம் இலாதவர்க்கு எதிராளி ஏது? - நற்பண்பு உடையோர்க்குப்
பகைவர் இல்லை; இடர் செய் துட்டருக்கு இரக்கம் ஏது? - (பிறர்க்குத்)
துன்பம் விளைக்கும் கொடியவர்க்கு அருள் இல்லை.
|