பக்கம் எண் :

130

     (கருத்து) சார்பு முதலானவை அற்றவர்க்கு நிலை முதலானவை
இல்லை.                                           (80)

       81. இதனினும் இது நன்று

பஞ்சரித் தருமையறி யார்பொருளை எய்தலின்
     பலர்மனைப் பிச்சைநன்று
பரிவாக உபசாரம் இல்லா விருந்தினிற்
     பட்டினி யிருக்கைநன்று

தஞ்சம்ஒரு முயலைஅடு வென்றிதனில் யானையொடு
     சமர்செய்து தோற்றல்நன்று
சரசகுணம் இல்லாத பெண்களைச் சேர்தலிற்
     சன்னியா சித்தல்நன்று

அஞ்சலார் தங்களொடு நட்பாய் இருப்பதனில்
     அரவினொடு பழகுவ துநன்
றந்தணர்க் காபத்தில் உதவா திருப்பதனில்
     ஆருயிர் விடுத்தல்நன்று

வஞ்சக ருடன்கூடி வாழ்தலில் தனியே
     வருந்திடும் சிறுமைநன்று
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மயிலேறி........குமரேசனே!-, அருமையறியார் பொருளைப்
பஞ்சரித்து எய்தலின் பலர்மனைப்பிச்சை நன்று - ஈகையின் அருமையை
உணராதவர்பால் பொருளையிரந்து பெறுதலினும் பலருடைய வீடுகளுக்குஞ்
சென்று பிச்சையெடுத்துண்ணல் நன்று; பரிவாக உபசாரம் இல்லா
விருந்தினில் பட்டினி இருக்கை நன்று - அன்புடன் உபசரியாத
விருந்துண்பதைவிடப் பட்டினியாக இருத்தல் நல்லது; தஞ்சம் ஒரு முயலை
அடுவென்றி தனில் யானையொடு சமர்செய்து தோற்றல் நன்று - எளிய ஒரு
முயலைக் கொன்ற வெற்றியினும் யானையொடு போர்செய்து தோற்பது