நல்லது; சரச குணம்
இல்லாத பெண்களைச் சேர்தலின் சந்நியாசித்தல் .
நன்று - இனிய பண்பு இல்லாத பெண்களைக் கூடுவதினும் துறவுபூணுதல்
நல்லது; அஞ்சலார் தங்களொடு நட்பாய் இருப்பதனில் அரவினொடு
பழகுவது நன்று - பகைவருடன் நட்பாய் இருப்பதினும் பாம்பொடு பழகல்
நல்லது; அந்தணர்க்கு ஆபத்தில் உதவாது இருப்பதினில் ஆருயிர் விடுத்தல்
நன்று - அருட்பண்புடையாருக்கு ஆதரவு செய்யமுடியாத நிலையினும்
இறப்பது நல்லது; வஞ்சகருடன் கூடிவாழ்தலில் தனியே வருந்திடும் சிறுமை
நன்று - கரவான எண்ணமுடையோருடன் கூடிவாழ்வதினும் தனியே
வருந்தும் இழிநிலை நல்லது.
(அருஞ்சொற்கள்)
பஞ்சரித்து
- இரந்து; பஞ்சம் என்ற சொல்லின்
அடியாகப் பிறந்தது. தஞ்சம் - எளிமை. அஞ்சலார் - பகைவர். அந்தணர்
- அருளுடையார்: அம் தண்மை உடையார் அந்தணர்; சாதியைக்
குறித்ததன்று.
(கருத்து)
ஈகையின்
அருமையறியார் பொருளை யிரந்து வாங்குதல்
போன்ற செயல்களினும் பிச்சையெடுத்தல் முதலானவை நல்லவை.
(81)
82.
நிலையற்றவை
கொற்றவர்கள்
ராணுவமும் ஆறுநேர் ஆகிய
குளங்களும் வேசையுறவும்
குணம்இலார் நேசமும் பாம்பொடு பழக்கமும்
குலவுநீர் விளையாடலும்
பற்றலார்
தமதிடை வருந்துவிசு வாசமும்
பழையதா யாதிநிணறும்
பரதார மாதரது போகமும் பெருகிவரு
பாங்கான ஆற்றுவரவும்
கற்றும்ஒரு
துர்ப்புத்தி கேட்கின்ற பேருறவும்
நல்லமத யானைநட்பும்
நாவில்நல் லுறவும்ஒரு நாள்போல் இராஇவைகள்
நம்பப் படாதுகண்டாய்
|
|