மற்றும்ஒரு
துணையில்லை நீதுணை எனப்பரவும்
வானவர்கள் சிறைமீட்டவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
‘மற்றும் ஒரு துணையில்லை; நீ துணை' எனப்பரவும்
வானவர்கள் சிறை மீட்டவா - ‘வேறு துணைவர் இல்லை; நீயே தஞ்சம்'
என்று வேண்டித் தாழ்ந்த அமரர்களின் சிறையை நீக்கியவனே!
மயிலேறி............குமரேசனே!-, கொற்றவர்கள் ராணுவமும் - அரசர்களின்
படையும், ஆறுநேர் ஆகிய குளங்களும் - ஆற்றுக்கெதிர்ப்படும்
பொய்கைகளும், வேசை உறவும் - பரத்தையரின் நட்பும், குணம் இலார்
நேசமும் - நற்பண்பு இல்லாதவரின் நட்பும், பாம்பொடு பழக்கமும் -
அரவுடன் பழகுதலும், குலவுநீர் விளையாடலும் - மிக்கநீரிலே ஆடுதலும்;
பற்றலார் தமதிடை வருந்து விசுவாசமும் - பகைவரிடம் வருந்திக்கொள்ளும்
அன்பும், பழைய தாயாதி நிணறும் - பழைய பங்காளிகளின் உறவும், பரதார
மாதர் அநுபோகமும் - பிறர் மனைவியரின் கூட்டுறவும், பெருகிவரு
பாங்கான ஆற்று வரவும் - பெருக்கெடுத்து வரும் அழகிய ஆற்று
வெள்ளமும், நற்றும் ஒரு துர்ப்புத்தி கேட்கின்றபேர் உறவும் - நயமாகப்
பேசும் கெடுமதியைக் கேட்டு நடக்கின்றவரின் நட்பும், நல்ல மதயானை
நட்பும் - அழகிய மதயானையின் நேசமும், நாவில் நல்லுறவும் -
பேச்சளவிலே உள்ள இனிய உறவும், ஒருநாள்போல் இரா -
ஒருநாளைப்போல நிலையாதவை இவைகள் நம்பப்படாது - (ஆகையால்)
இவற்றை நம்புதல் கூடாது.
(அருஞ்சொற்கள்)
கண்டாய்:
முன்னிலை அசைச்சொல். கொற்றம் -
வெற்றி. வெற்றியுடையோர் கொற்றவர்: அரசர். பற்று அலார் - பகைவர்
(அன்பற்றவர்). நிணறு - உறவு.
(கருத்து)
இங்குக்
கூறியவை நிலையற்றவை. (82)
|