பக்கம் எண் :

133

     83. நற்புலவர் தீப்புலவர் செயல்

மிக்கான சோலையிற் குயில்சென்று மாங்கனி
     விருப்பமொடு தேடிநாடும்
மிடைகருங் காகங்கள் எக்கனி இருந்தாலும்
     வேப்பங் கனிக்குநாடும்

எக்காலும் வரிவண்டு பங்கே ருகத்தினில்
     இருக்கின்ற தேனைநாடும்
எத்தனை சுகந்தவகை உற்றாலும் உருள்வண்
     டினம்துர் மலத்தைநாடும்

தக்கோர் பொருட்சுவை நயங்கள்எங் கேயென்று
     தாம்பார்த் துகந்துகொள்வார்
தாழ்வான வன்கண்ணர் குற்றம்எங் கேயென்று
     தமிழில்ஆ ராய்வர்கண்டாய்

மைக்காவி விழிமாது தெய்வானை யும்குறவர்
     வள்ளியும் தழுவு தலைவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மை காவி விழிமாது தெய்வானையும் குறவர் வள்ளியும்
தழுவு தலைவா! - மை தீட்டப்பெற்ற குவளை மலர்போன்ற
கண்களையுடைய தெய்வயானையாரும், வேடர்மகள் வள்ளியம்மையாரும்
தழுவும் தலைவனே!, மயிலேறி..........குமரேசனே! -, மிக்கான
சோலையிற்குயில் சென்று மாங்கனி விருப்பமொடு தேடி நாடும் - பலவகை
மரங்கள் மிகுந்த சோலையிலே மாங்கனியையே குயில் விருப்பத்தோடு
தேடியடையும்; மிடை கருங்காகங்கள் எக்கனியிருந்தாலும் வேப்பங்கனிக்கு
நாடும் - கூட்டமான காகங்கள் எந்தப் பழங்கள் இருந்தாலும்
வேப்பம்பழத்தையே தேடும்; எக்காலும் வரிவண்டு பங்கேருகத்தினில்
இருக்கின்ற தேனை நாடும் - எப்போதும் புள்ளிகளையுடைய வண்டுகள்
தாமரை மலரிலுள்ள தேனைத் தேடும்; எத்தனை