சுகந்தவகை உற்றாலும்
உருள்வண்டு இனம் துர்மலத்தை நாடும் - எத்துணை
நறுமணக் கலவைகள் இருந்தாலும் உருண்டுசெல்லும் வண்டுக்கூட்டம்
புன்மணமுடைய மலத்தையே தேடும்; (ஆகையால்) தக்கோர் பொருட்சுவை
நயங்கள் எங்கேயென்று தாம் உகந்து பார்த்துக் கொள்வார் - நல்ல
புலவர்கள் பொருளின் சுவையும் அழகும் எங்குள்ளன என்று விரும்பித்
தேடித் தெரிந்துகொள்வார்கள்; தாழ்வான வன்கண்ணர் குற்றம் எங்கே
என்று தமிழில் ஆராய்வர் - இழிந்த கொடும் புலவர்கள் தமிழ்ப்பாக்களிலே
குற்றம் எங்கேயென்று தேடுவர்.
(அருஞ்சொற்கள்)
பங்கேருகம்
(வட) - தாமரை. சுகந்தம் - (வட) -
நறுமணம். வன்கண்ணர் - கொடியவர். கண்டாய்: முன்னிலை அசைச்சொல்.
(கருத்து)
குணத்தைக்
கொள்ளவேண்டும்; குற்றத்தை நீக்க
வேண்டும். (83)
84.
தாழ்வில்லை
வேங்கைகள்
பதுங்குதலும் மாமுகில் ஒதுங்குதலும்
விரிசிலை குனிந்திடுதலும்
மேடம தகன்றிடலும் யானைகள் ஒடுங்குதலும்
வெள்விடைகள் துள்ளிவிழலும்
மூங்கில்கள்
வணங்குதலும் மேலவர் இணங்குதலும்
முனிவர்கள் நயந்துகொளலும்
முதிர்படை ஒதுங்குதலும் வினையர்கள் அடங்குதலும்
முதலினர் பயந்திடுதலும்
ஆங்கரவு
சாய்குதலும் மகிழ்மலர் உலர்ந்திடலும்
ஆயர்குழல் சூடுபடலும்
அம்புவியில் இவைகா ரியங்களுக் கல்லாமல்
அதனால் இளைப்புவருமோ
|
|