85.
தெய்வச் செயல்
சோடாய்
மரத்திற் புறாரெண் டிருந்திடத்
துறவுகண் டேவேடுவன்
தோலாமல் அவையெய்யவேண்டும் என்றொருகணை
தொடுத்துவில் வாங்கிநிற்க
ஊடாடி
மேலே எழும்பிடின் அடிப்பதற்
குலவுரா சாளிகூட
உயரப் பறந்துகொண் டேதிரிய அப்போ
துதைத்தசிலை வேடன் அடியில்
சேடாக
வல்விடம் தீண்டவே அவன்விழச்
சிலையில்தொ டுத்தவாளி
சென்றிரா சாளிமெய் தைத்துவிழ அவ்விரு
சிறைப்புறா வாழ்ந்த அன்றோ
வாடாமல்
இவையெலாம் சிவன்செயல்கள் அல்லாது
மனச்செயலி னாலும்வருமோ
மயிலேறி விளைாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
மயிலேறி..........குமரேசனே!-,
மரத்தில் புறா, ரெண்டு சோடாய்
இருந்திட - ஒரு மரத்தில் இருபுறாக்கள் இணையாக இருக்க, வேடுவன்
துறவு கண்டே - ஒரு வேடுவன் அவற்றின் வாய்ப்பான நிலையைக் கண்டு
தோலாமல் அவை எய்யவேண்டும் என்று - தவறாமல் அவற்றை
ஓரம்பினாலேயே அடித்தல்வேண்டும் என நினைத்து, வில் வாங்கி ஒரு
கணை தொடுத்து நிற்க - வில்லை வளைத்து ஓர் அம்பு பூட்டிக்கொண்டு
நிற்கும்போது, மேலே எழும்பிடின் அடிப்பதற்கு உலவு ராசாளிகூட ஊடாடி-
மேலே எழுந்தால் தாக்கிப் பற்றுவதற்குத் திரியும் இராசாளிப் பறவையும்
சுழன்றுகொண்டு, உயரப் பறந்துகொண்டே திரிய - வானத்திற்
பறந்துகொண்டிருக்க, அப்போது - அந்நிலையில், உதைத்த சிலைவேடன்
அடியில் - (தன்னை) மிதித்த வில்
|