|
(அருஞ்சொற்கள்) கோடுதல் - மாறுபடுதல். படி - உலகு; இங்கு
அவன் ஆளும் நாட்டை மட்டும் குறிக்கிறது. தளம் - படை கர்த்தர்
(வடமொழி) - தலைவர். அகம்-மனம்; இங்கே தற்பெருமையைக் குறிக்கிறது.
சுகுணம் (வடமொழி) - நற் பண்பு. துட்டர் (வடமொழி) - கயவர். நிக்கிரகம்
(வடமொழி) - நீக்குதல். சௌரியம் (வடமொழி) - வீரம். காண் : முன்னிலை
அசைச்சொல்.
(கருத்து)
அரசர்கள் குடிகளிடம் அன்பும், தரம் அறிதலும்,
குறிப்பறிதலும், நல்ல நட்புடன் செருக்கின்றி யிருத்தலும், காலம் இடம்
வலியறிந்து பகைவரை வெல்வதும், கயவரை ஒறுத்தலும் உடையவர்களாக
இருத்தல் வேண்டும். (3)
|
4.
வணிகர் இயல்பு
கொண்டபடி
போலும்விலை பேசிலா பம்சிறிது
கூடிவர நயமுரைப்பார்;
கொள்ளுமொரு முதலுக்கு மோசம்வ ராதபடி
குறுகவே செலவுசெய்வார்;
வண்டப்
புரட்டர் தாம் முறிதந்து, பொன் அடகு
வைக்கினும் கடன்ஈந்திடார்;
மருவுநா ணயமுளோர் கேட்டனுப் புகினுமவர்
வார்த்தையில் எலாம்கொடுப்பார்;
கண்டெழுது
பற்றுவர வினின்மயிர் பிளந்தே
கணக்கில் அணு வாகிலும்விடார்;
காசுவீ ணிற்செல விடார் உசித மானதிற்
கனதிரவி யங்கள்விடுவார்;
மண்டலத்
தூடுகன வர்த்தகம் செய்கின்ற
வணிகர்க்கு முறைமையிதுகாண்
மயிலேறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|
(இ-ள்.)
கொண்ட படிபோலும் விலைபேசி லாபம் சிறிது கூடிவர
நயம் உரைப்பார் - வாங்கிய (விலைப்)படியில் உள்ளவாறு விலைகூறிச்
சிறிது ஊதியம் வரும்படி இனிமையாகப் பேசுவார்; கொள்ளும் ஒரு
முதலுக்கு மோசம்
|