பக்கம் எண் :

139

         87.திருநீறு வாங்கும் முறை

பரிதனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர்
     பலகையில் இருந்தும்மிகவே
பாங்கான அம்பலந் தனிலே இருந்தும்
     பருத்ததிண் ணையிலிருந்தும்

தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேல்நின்று
     திருநீறு வாங்கியிடினும்
செங்கையொன்றாலும்விரல் மூன்றாலும் வாங்கினும்
     திகழ்தம் பலத்தினோடும்

அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும்
     அசுத்தநில மான அதினும்
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும்
     அவர்க்குநர கென்பர்கண்டாய்

வரிவிழி மடந்தைகுற வள்ளிநா யகிதனை
     மணந்துமகிீழ் சகநாதனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) வரிவிழி மடந்தை குறவள்ளிநாயகிதனை மணந்து மகிழ் சகநா
தனே! - செவ்வரி படர்ந்த திருக்கண்களையுடைய குறமடந்தையார்
வள்ளியம்மையாரைத் திருமணம்புரிந்து மகிழும் உலகமுதல்வனே!,
மயிலேறி......குமரேசனே!-, பரிதனில் இருந்தும் - குதிரைமீது அமர்ந்தும், இயல்
சிவிகையில் இருந்தும் - அழகிய பல்லக்கில் அமர்ந்தும், உயர் பலகையில்
இருந்தும் - உயரமான மணைமீது அமர்ந்தும், பாங்கான அம்பலந்தனிலே
மிக இருந்தும் - அழகிய பொதுவிடத்திலே நன்றாக அமர்ந்தும், பருத்த
திண்ணையில் இருந்தும் - பெரிய திண்ணைகளில் அமர்ந்தும்,
கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேல்நின்று திருநீறு தெரிவொடு வாங்கி இடினும்
- திருநீறு அளிப்போர்கள் கீழேயிருக்க (வாங்குவோர்) மேலிடத்திலிருந்து
வாங்கி