(இ-ள்.)
மேரு
இனிய மத்து என வைத்து அமுதினைக் கடையும்
மால்மருகனான முருகா! - மேருமலையை அழகிய மத்தாகக்கொண்டு
அமுதைக் கடைந்த திருமாலின் மருகனான முருகனே!, மயிலேறி........
குமரேசனே ! -, பத்தியொடு சிவசிவா என்று பரிவொடு திருநீற்றைக்
கையால் எடுத்து - பேரன்புடன் சிவசிவா என்று வழுத்தி விருப்பத்துடன்
திருநீற்றைக் கையினால் அள்ளி, பாரினில் விழாத படி அண்ணாந்து
செவியொடு பருத்த புயம்மீது ஒழுக - நிலத்திற் சிந்தாதவாறு
மேல்நோக்கியவாறு காதுகளின் மீதும் தோள்களின்மீதும் படியும்வண்ணம்,
நெற்றியில் அழுந்தலுற மூவிரல்களால் நித்தமும் நினைவாய்த் தரிப்பவர்க்கு
- நெற்றியிற் பதியும்படி மூன்று விரல்களால் ஒவ்வொரு நாளும் (சிவ)
நினைவுடன் அணிபவர்க்கு, நீடுவினை அணுகாது - நீண்டநாளைய பழவினை
நெருங்காது; தேக பரிசுத்தம் ஆம் - மெய் தூயது ஆகும்; அங்கே நிமலன்
நீங்காமல் சத்தியொடு நித்தம் விளையாடுவன் - அவர்களிடமிருந்து
பரம்பொருள் விலகாமல் உமையம்மையாருடன் எப்போதும் விளையாடுவான்;
முகத்திலே திரு தாண்டவம் செய்யும் - முகத்திலே திருமகள் நடம்புரிவாள்;
சஞ்சலம் வராது - மனக்கலக்கம் உண்டாகாது; பரகதி உதவும் - மேலான
வீடு தரும்; இவரையே சத்தியும் சிவனும் எனலாம் - இவர்களையே சத்தியும்
சிவனும் என விளம்பலாம்.
(கருத்து)
திருநீற்றை அன்புடன் அணிவோர் இம்மை
மறுமையின்பங்களை எளிதின் எய்துவார். (88)
89.
பயனற்ற உறுப்புக்கள்
தேவா
லயஞ்சுற்றி டாதகால் என்னகால்
தெரிசியாக் கண்என்னகண்
தினமுமே நின்கமல பாதத்தை நினையாத
சிந்தைதான் என்னசிந்தை
மேவா
காம்சிவ புராண மவை கேளாமல்
விட்டசெவி என்ன செவிகள்
|
|