விமலனை
வணங்காத சென்னிஎன் சென்னிபணி
விடைசெயாக் கையென்னகை
நாவார
நினையேத்தி டாதவாய் என்னவாய்
நல்தீர்த்தம் மூழ்காவுடல்
நானிலத் தென்னவுடல் பாவியா கியசனனம்
நண்ணினாற் பலனேதுகாண்
மாவாகி
வேலைதனில் வருசூரன் மார்புருவ
வடிவேலை விட்டமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|