(விளக்கவுரை) தேவ
+ ஆலயம்: தேவாலயம். சிவபுராணம்
என்றதனால் ஆகமமும் கோயிலும் பிறவும் சிவத்தொடர்பு ஆயின. முல்லை,
குறிஞ்சி, மருதம், நெய்தல் என நால்வகைப்படும். ஆகையால் நிலம்
நானிலம் ஆயிற்று. நான்கு + நிலம்: நானிலம்.
(கருத்து)
சிவபிரானை
வழிபடாத பிறவி பயனற்றது. (89)
90.
நற்பொருளுடன் தீயபொருள்
கோகனக
மங்கையுடன் மூத்தவள் பிறந்தென்ன
குலவும் ஆட்டின்கண் அதர்தான்
கூடப் பிறந்தென்ன தண்ணீரி னுடனே
கொடும்பாசி உற்றும்என்ன
மாகர்உணும்
அமுதினொடு நஞ்சம் பிறந்தென்ன
வல்இரும் பில்துருத்தான்
வந்தே பிறந்தென்ன நெடுமரந் தனில்மொக்குள்
வளமொடு பிறந்தென்னஉண்
பாகமிகு
செந்நெலொடு பதர்தான் பிறந்தென்ன
பன்னுமொரு தாய்வயிற்றில்
பண்புறு விவேகியொடு கயவர்கள் பிறந்தென்ன
பலன்ஏதும் இல்லை அன்றோ
மாகனக
மேருவைச் சிலையென வளைத்தசிவன்
மைந்தனென வந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
மாகனக
மேருவைச் சிலையென வளைத்த சிவன் மைந்தன்
எனவந்த முருகா! - பெரிய பொன்மயமான மேருமலையை வில்லாக
வளைத்த சிவபிரானுக்குத் திருமகவாகத் தோன்றிய முருகனே!,
மயிலேறி........குமரேசனே!-, கோகனக மங்கையுடன் மூத்தவள் பிறந்து என்ன?
- தாமரையாளுடன் (இலக்குமியுடன்) மூதேவி பிறந்ததனால் (மூதேவிக்கு)
யாது நலம், குலவும் ஆட்டின்
|