கண் அதர்தான் கூடப்பிறந்து
என்ன?- விளங்கும் ஆட்டினிடத்தில்
(கழுத்தில் நீண்டு தொங்கும்) அலைதாடி உடன் பிறந்து யாது பயன்?,
தண்ணீரினுடனே கொடும்பாசி உற்றும் என்ன? - தண்ணீரில் கொடிய பாசி
தோன்றிப் பயன் யாது?, மாகர் உணும் அமுதினோடு நஞ்சம் பிறந்து
என்ன? - வானவர்உண்ணும் அமுதத்தோடு நஞ்சு தோன்றி யாது பயன்?
வல்இரும்பில் துருத்தான் வந்தே பிறந்து என்ன - உறுதியான இரும்புடன்
துருவந்து தோன்றி யாதுபயன்?, நெடுமரந்தனில் மொக்குள் வளமொடு
பிறந்து என்ன - நீண்ட மரத்தினிலே (குமிழிபோன்ற) முடிச்சு செழிப்புடன்
உண்டாகி யாது பயன்?, உண்பாகம்மிகு செந்நெலொடு பதர்தான் பிறந்து
என்ன - உண்ணும் பதம்மிகுந்த செந்நெல்லுடன் பதர் தோன்றி யாது
பயன்?, பன்னும் ஒரு தாய்வயிற்றில் பண்புஉறு விவேகியொடு கயவர்கள்
பிறந்து என்ன - சிறப்பாகச் சொல்லப்படும் ஒரு தாயின் வயிற்றிலே
நற்குணமுடைய அறிவாளியுடன் கொடியவர்கள் தோன்றி யாது பயன்?,
பலன் ஏதும் இல்லை அன்றோ - எவ்வகை நலனும் இல்லையன்றோ?
(அருஞ்சொற்கள்)
கனகம் (வட)பொன். கோகனகம் (வட) - தாமரை.
மாகர் (வட) - வானவர். அதர் - அலைதாடி (ஆட்டின் கழுத்தில்
தொங்குவது) மொக்குள்: மொக்குள் போன்ற முடிச்சு.
(கருத்து)
நல்லதுடன்
தீயது தோன்றினும் நற்பொருளாகாது. (90)
91.
கோடரிக்காம்பு
குலமான
சம்மட்டி குறடுகைக் குதவியாய்க்
கூர்இரும் புகளைவெல்லும்
கோடாலி தன்னுளே மரமது நுழைந்துதன்
கோத்திரம் எலாம் அழிக்கும்
நலமான
பார்வைசேர் குருவியா னதுவந்து
நண்ணுபற வைகளை ஆர்க்கும்
நட்புடன் வளர்த்தகலை மானென்று சென்றுதன்
நவில்சாதி தனையிழுக்கும்
|
|