உலவுநல்
குடிதனிற் கோளர்கள் இருந்துகொண்
டுற்றாரை யீடழிப்பர்
உளவன்இல் லாமல்ஊர் அழியாதெனச் சொலும்
உலகமொழி நிசம் அல்லவோ
வலமாக வந்தர
னிடத்தினிற் கனிகொண்ட
மதயானை தன்சோதரா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
வலமாக
வந்து அரனிடத்திற் கனிகொண்ட மதயானைதன்
சோதரா - (அரனை) வலமாகச் சுற்றிவந்து அவரிடம் மாங்கனிபெற்ற
விநாயகரின் தம்பியே!, மயிலேறி.........குமரேசனே!-, குலமான சம்மட்டி குறடு
கைக்கு உதவியாய்க் கூர் இரும்புகளை வெல்லும் - (இரும்பின்) குலமான
சம்மட்டியும் குறடும் (கொல்லன்) கைக்குத் துணைபுரிந்து மிகுதியான
இரும்புகளை அடக்கும்; கோடாலி தன்னுளே மரமது நுழைந்துதன்
கோத்திரம் எலாம் அழிக்கும் - கோடரியின் உள்ளே மரம் (காம்பாக)
சேர்ந்துகொண்டு தன் மரபான மரங்களை ஒழிக்கும்; நலமான பார்வைசேர்
குருவியானது வந்து நண்ணு பறவை களை ஆர்க்கும் - அழகான
பார்வைக்குருவி (தன்னைப் பார்த்து) வந்து அருகில் அமரும் பறவைகளைக்
கட்டுப்படுத்தும்; நட்புடன் வளர்த்த கலைமான் ஒன்று சென்று நவில்தன்
சாதிதனை யிழுக்கும் - அன்புடன் வளர்க்கப்பட்ட கலைமான் (காட்டில்)
சென்று சொல்லப்படும் தன் இனத்தை அகப்படுத்தும்; உலவும் நல்குடிதனில்
கோளர்கள் இருந்துகொண்டு உற்றாரை யீடழிப்பார் - (பலருடனும்) பழகும்
நல்ல குடியிலே கோளுரைப்போர் சேர்ந்து கொண்டு உறவினரின் மதிப்பைக்
கெடுப்பர்; ‘உளவன் இல்லாமல் ஊர் அழியாது' எனச் சொல்லும் உலகமொழி
நிசம் அல்லவோ - ‘உளவுகூறுவோன் இல்லாவிட்டால் ஊர் கெடாது' என்று
கூறும் உலகச்சொல் உண்மையன்றோ?
|