பக்கம் எண் :

146

     (விளக்கவுரை) ‘பார்வை மிருகம்? - ‘பார்வைப் பறவை' என்பவை
மனிதர்களாற் பழக்கப்பட்டு, அவற்றின் இனத்தைப் பிடிக்கப் பயன்படும்.
குறடு - பற்றுக்கோடு. ‘உளவன் இன்றி ஊர் பாழாகாது' என்பது பழமொழி.
கோடரி என்ற சொல்லே ‘கோடாலி' என மருவியது.

     (கருத்து) ‘உளவன் இல்லாமல் ஊர் பாழகாது.'           (91)

            92. வீணுக்குழைத்தல்

குயில்முட்டை தனதென்று காக்கை அடைகாக்கும்
     குணம்போலும் ஈக்கள் எல்லாம்
கூடியே தாம்உண்ண வேண்டும்என் றேதினம்
     கூடுய்த்த நறவுபோலும்

பயில்சோர ருக்குப் பிறந்திடத் தாம்பெற்ற
     பாலன்என் றுட்கருதியே
பாராட்டி முத்தம்இட் டன்பாய் வளர்த்திடும்
     பண்பிலாப் புருடர்போலும்

துயிலின்றி நிதிகளைத் தேடியே ஒருவர்பால்
     தொட்டுத் தெரித்திடாமல்
தொகைபண்ணி வைத்திடுவர் கைக்கொண்டு போகவரு
     சொந்தமா னவர்வேறுகாண்

வயிரமொடு சூரனைச் சங்கார மேசெய்து
     வானவர்க் குதவுதலைவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) சூரனை வயிரமொடு சங்காரமே செய்து வானவர்க்கு உதவு
தலைவா - சூரனைச் சினந்து வீழ்த்தித் தேவர்களுக்குத் துணைபுரிந்த
முதல்வனே!, மயிலேறி............குமரேசனே!-, குயில் முட்டை தனது என்று
காக்கை அடைகாக்கும் குணம்போலும் - குயிலின் முட்டையைத்
தன்னுடையது என்று நினைத்துக் காகம் அடைகாக்கும் தன்மையைப்போலும்,
ஈக்கள் எல்லாம் கூடியே தாம்