பக்கம் எண் :

147

உண்ணவேண்டும் என்றே தினம் கூடுஉய்த்த நறவு போலும் - எல்லா
ஈக்களும் சேர்ந்து தாங்கள் பருகவேண்டும் என்று நினைத்து நாள்தோறும்
கூட்டிற்கொண்டு வைத்த தேனைப்போலவும், பயில் சோரருக்குப் பிறந்திடத்
தாம்பெற்ற பாலன் என்று உள் கருதியே - (தம் மனைவியருடன்) கலந்த
கள்ளக்காதலருக்குப் பிறந்த பிள்ளையைத் தாங்கள் பெற்ற மகன் என்று
மனத்தில் எண்ணி, பாராட்டி முத்தம் இட்டு அன்பாய் வளர்த்திடும் பண்பு
இலா புருடர் போலும் - கொண்டாடி முத்தம்கொடுத்து அன்புடன்
வளர்க்கின்ற மனித இயல்பு இல்லாத ஆடவர்களைப்போலும், துயில் இன்றி
நிதிகளைத் தேடியே ஒருவர்பால் தொட்டுத் தெரித்திடாமல் - தூக்கம்
இல்லாமற் செல்வத்தை ஈட்டி ஒருவர்க்கும் அணுவளவும் கொடுக்காமல்,
தொகைபண்ணி வைத்திடுவர் - தொகைதொகையாக எண்ணி வைத்திடுவர்
(சிலர்), கைக்கொண்டு போகவரு சொந்தமானவர் வேறு - (அப்பொருளை)
எடுத்துக்கொண்டுபோக வருகின்ற உரிமையாளர் வேறாவார்.

     காண் : முன்னிலை அசைச்சொல்.

     (கருத்து) பிறருக்குக் கொடுத்துத் தாமும் உண்ணாமற் சேர்த்து
வைப்பவர் பொருளை மற்றவரே அனுபவிப்பார்.              (92)

         93. வீணாவன

அழலுக்கு ளேவிட்ட நெய்யும் பெருக்கான
     ஆற்றிற்க ரைத்தபுளியும்
அரிதான கமரிற் கவிழ்த்திட்ட பாலும்வரும்
     அலகைகட் கிடுபூசையும்

சுழல்பெருங் காற்றினில் வெடித்தபஞ் சும்மணல்
     சொரிநறும் பனிநீரும்நீள்
சொல்லரிய காட்டுக் கெரித்தநில வும்கடற்
     சுழிக்குளே விடுகப்பலும்