94.
கைவிடத்தகாதவர்
அன்னைசுற்
றங்களையும் அற்றைநாள் முதலாக
அடுத்துவரு பழையோரையும்
அடுபகைவ ரில்தப்பி வந்தவொரு வேந்தனையும்
அன்பான பெரியோரையும்
தன்னைநம்
பினவரையும் ஏழையா னவரையும்
சார்ந்தமறை யோர்தம்மையும்
தருணம்இது என்றுநல் லாபத்து வேளையிற்
சரணம்பு குந்தோரையும்
நன்னயம
தாகமுன் உதவிசெய் தோரையும்
நாளும்த னக்குறுதியாய்
நத்துசே வகனையும் காப்பதல் லாதுகை
நழுவவிடல் ஆகாதுகாண்
மன்னயிலும்
இனியசெஞ் சேவலும் செங்கைமலர்
வைத்தசர வணபூபனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
மன் அயிலும் இனிய செஞ்சேவலும் செங்கைமலர் வைத்த
சரவண பூபனே - பொருத்தமான வேலையும் அழகிய சிவந்த
சேவற்கொடியையும் சிவந்த மலர்க்கைகளில் வைத்திருக்கும் சரவணனே!
உலகமுதல்வனே!, மயிலேறி........குமரேசனே!-, அன்னை சுற்றங்களையும் -
தாயையும் உறவினரையும், அற்றைநாள் முதலாக அடுத்துவரு
பழையோரையும் - (நாம் அறிவுபெற்ற) அந்தக் காலத்திலிருந்து நம்மைச்
சார்ந்துவரும் பழைமையானவர்களையும், அடுபகைவரில் தப்பிவந்த ஒரு
வேந்தனையும் - போர்புரியும் பகைவர் கூட்டத்திலிருந்து பிரிந்து
(அடைக்கலமென்று) வந்த ஓரரசனையும், அன்பான பெரியோரையும் -
அன்புடைய பெரியோர்களையும், தன்னை நம்பினவரையும் - தன்னிடம்
நம்பிக்கையுடையவர்களையும், ஏழையான
|