வரையும் - ஏழைகளையும்,
சார்ந்த மறையோர் தம்மையும் - அடுத்த
மறையவர்களையும், தருணம் இது என்று நல் ஆபத்து வேளையில் சரணம்
புகுந்தோரையும் - (ஆதரிக்கவேண்டிய) சமயம் இது எனக் கூறி
இடருற்றபோது அடைக்கலம் புகுந்தவர்களையும், நல்நயமதாக முன் உதவி
செய்தோரையும் - மிக நன்றாக முதலில் துணைபுரிந்தவர்களையும், நாளும்
தனக்கு உறுதியாய் நத்து சேவகனையும் - எப்போதும் தனக்கு நன்மை
செய்பவனாய் விரும்பி ஒழுகும் பணியாளனையும், காப்பது அல்லாது
கைநழுவவிடல் ஆகாது - ஆதரிக்கவேண்டுமே அன்றிக் கைசோர
விடக்கூடாது.
காண் : முன்னிலை
அசைச்சொல்.
(விளக்கவுரை)
அன்று என்பது அற்றை என வழங்குகிறது.
அன்று+ஐ : அற்றை. ஐ : சாரியை. மன்னுதல் - நிலைபெறுதல். நத்துதல் -
விரும்புதல்.
(கருத்து)
அன்னை
முதலானோர் கைவிடத்தகாதவர். (94)
95.
தகாத செயல்கள்
அண்டிவரும்
உற்றார் பசித்தங் கிருக்கவே
அன்னியர்க் குதவுவோரும்
ஆசுதபு பெரியோர்செய் நேசத்தை விட்டுப்பின்
அற்பரை அடுத்தபேரும்
கொண்டஒரு
மனையாள் இருக்கப் பரத்தையைக்
கொண்டாடி மருவுவோரும்
கூறுசற் பாத்திரம் இருக்கமிகு தானமது
குணம்இலார்க் கீந்தபேரும்
கண்டுவரு
புதியோரை நம்பியே பழையோரைக்
கைவிட் டிருந்தபேரும்
கரிவாலை விட்டுநரி வால்பற்றி நதிநீர்
கடக்கின்ற மரியாதைகாண்
|
|