பக்கம் எண் :

152

செழுங்கிளை தாங்குதல்' ‘பெரியோரைத் துணைக்கொள்' 'பாத்திரம்
அறிந்து பிச்சையிடு' என்பவை இங்கே கருதத்தக்கவை.

     (கருத்து) உறவினர் முதலானோரையே ஆதரிக்கவேண்டும்.

       96. நல்லோர் முறை

கூடியே சோதரர்கள் வாழ்தலா லும்தகு
     குழந்தைபல பெறுதலாலும்
குணமாக வேபிச்சை யிட்டுண்கை யாலும்
     கொளும்பிதிர்க் கிடுதலாலும்

தேடியே தெய்வங்க ளுக்கீத லாலும்
     தியாகம் கொடுத்தலாலும்
சிறியோர்கள் செய்திடும் பிழையைப் பொறுத்துச்
     சினத்தைத் தவிர்த்தலாலும்

நாடியே தாழ்வாய் வணங்கிடுத லாலுமிக
     நல்வார்த்தை சொல்லலா லும்
நன்மையே தருமலால் தாழ்ச்சிகள் வராஇவை
     நல்லோர்கள் செயும்முறைமைகாண்

வாடிமனம் நொந்துதமிழ் சொன்னநக் கீரன்முன்
     வந்துதவி செய்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மனம் வாடிநொந்து தமிழ் சொன்ன நக்கீரன் முன்வந்து
உதவிசெய்த முருகா - உளம் சோர்ந்து (திருமுருகாற்றுப்படையெனும்)
தமிழ்ப்பாவைப் பாடிய நக்கீரன்முன் எழுந்தருளி அருள்புரிந்த முருகனே!,
மயிலேறி............குமரேசனே!-, சோதரர்கள் கூடியே வாழ்தலாலும் -
உடன்பிறந்ததோர் ஒன்றாகக் குடிநடத்துவதாலும், பல தகு குழந்தை
பெறுதலாலும் - பல நல்ல மக்களைப் பெறுவதாலும், குணமாகவே பிச்சை
இட்டு உண்கையாலும் - நற்பண்புடன் ஈந்து சாப்பிடுவதாலும்,