வந்த புறாவைக் காப்பாற்றச்
சிபிச்சக்கரவர்த்தி தன் மெய்யையே அதற்கு
ஈடாகத் தந்தான்; முன் தடமலைச்சிறகு அரிந்தவனைக் காக்கத் ததீசி
முதுகு என்பு அளித்தான் - முன்னாளில் பெரிய மலைகளின் சிறகை
வெட்டிய இந்திரனைக் காப்பாற்றத் ததீசிமுனிவன் தன் முதுகெலும்பை
(வச்சிராயுதமாக்க) அளித்தான்; இன்சொலுடனே பூததயவு உடையர்
ஆயினோர் இனியமொழியும் உயிர்களிடம் இரக்கமும் கொண்டோர்,
ஆபத்திலே எவருக்கும் தம் இனிய சீவனை விடுத்தாகிலும் காத்து இரங்கி
ரட்சிப்பர் அன்றோ? - இடையூறு எவர்க்கு நேர்ந்தாலும் தம் இனிய
உயிரைவிட்டாவது இரக்கத்துடன் காப்பாற்றியருளுவர் அல்லவா?
தருமன் கதை
தருமன் சுவர்க்கத்தை
நாடிப்போகையில், ஒரு நாய் இழிந்த நாற்றத்துடன்
பின்தொடர்ந்தது. அங்குக் குறுக்கிட்ட ஆற்றைக் கடக்கமுடியாமல் அது
வருந்த நாயைத் தருமன் தன் தோளிலே சுமந்து அக்கரையிற்
கொண்டுசேர்த்தான்.
அருச்சுனன்
கதை:
தன்னைக் கொல்லவேண்டிச்
சக்கரத்தை ஏவிய கண்ணனுக்கு அஞ்சிய கயன்
என்னும் கத்தருவன் அருச்சுனனைச் சரணடைந்தான். அவனைக்
காப்பதற்காகக் கண்ணனோடு அருச்சுனன் போர் செய்யநேர்ந்தது, முடிவில்
இருவரும் சமாதானம் அடைந்து கந்தருவனை விடுவித்தனர்.
சிபிச்சக்கரவர்த்தி
கதை:
ஒரு வேடன் புறா ஒன்றைத்
துரத்திவந்தான். அப் புறா சிபிச்
சக்கரவர்த்தியின் மடியில் வந்து விழுந்துவிட்டது. அதனைக் காப்பதற்காக
வேடன் விரும்பியவாறு தன் மெய்யிலிருந்து ஊனை அரிந்து புறாவின்
எடைக்கு ஈடாகும்படி தராசில் வைத்தான். புறா தெய்வத்தன்மை
யுடையதாகையால், அவனுடைய மெய்யிலுள்ள ஊனைவிடக் கனத்தது.
இறுதியில் அவனே தராசில் நின்றான் அவனுடைய பண்பை ஆராயவந்த
வேடனாகிய இந்திரனும் புறாவாகிய அக்கினியும் மகிழ்ந்தனர்.
ததீசியின்
கதை:
இந்திரனுடைய வச்சிராயுதம்
மிகவும் பழையதாகி முறிந்து விட்டது.
அவனுக்குப் புதிய வச்சிராயுதம் வேண்டும் என்று
|