98.
தக்கவையும் தகாதவையும்
பாலினொடு
தேன்வந்து சேரில்ருசி அதிகமாம்
பருகுநீர் சேரின் என்னாம்
பவளத்தி னிடைமுத்தை வைத்திடிற் சோபிதம்
படிகமணி கோக்கின்என்னாம்
மேலினிய
மன்னர்பால் யானைசேர் வதுகனதை
மேடமது சேரின்என்னாம்
மிக்கான தங்கத்தில் நவமணி உறின்பெருமை
வெண்கல் அழுத்தின்என்னாம்
வாலிப
மினார்களுடன் இளையோர்கள் சேரின்நலம்
வளைகிழவர் சேரின்என்னாம்
மருவுநல் லோரிடம் பெரியோர் வரின்பிரியம்
வருகயவர் சேரின்என்னாம்
மாலிகை
தரித்தமணி மார்பனே தெய்வானை
வள்ளிக்கு வாய்த்தகணவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|