பக்கம் எண் :

13

சொல்லரிய யாகாதி கருமங்கள் செய்வதும்,
     தொல்புவி செழிக்கும்நலமும்,
சுபசோப னங்களும், கொற்றவர்கள் செங்கோல்
     துலங்குமனு நெறிமுறைமையும்,

வெல்லரிய சுகிர்தமொடு வர்த்தகர் கொள்விலையும்
     விற்பனையும், அதிகபுகழும்,
மிக்க அதி காரமும், தொழிலாளர் சீவனமும்,
     வீரரண சூரவலியும்,

வல்லமைகள் சகலமும், வேளாளர் மேழியின்
     வாழ்வினால் விளைவ அன்றோ?
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

     (இ-ள்.) நல்ல தேவாலயம் பூசனை நடப்பதும் - நன்மையைத் தரும்
தெய்வங்களின் கோயில்களில் வழிபாடு நடைபெறுவதும், நாள்தோறும் மழை
பொழிவதும் - காலம் தவறாமல் மழை பெய்வதும், நாடிய தபோதனர்கள்
மாதவம் புரிவதும் - தவத்தை நாடியவர்கள் பெரிய தவம் செய்வதும்,
வேதம் நவில் வேதியரெலாம் சொல்லரிய யாகாதி கருமங்கள் செய்வதும் -
மறையை ஓதும் மறையவர்களெல்லோரும் கூறுதற் கியலாத பெருமை மிக்க
வேள்வி முதலிய தொழில்களைப் புரிவதும், தொல்புவி செழிக்கும் நலமும் -
பழைமையான உலகம் வளம் பெறுதற்குரிய செயல்களும், சுப
சோபனங்களும் - நல்ல மங்கலத் தொழில்களும், கொற்றவர்கள் செங்கோல்
துலங்கும் மனுநெறி முறைமையும் - அரசர்களுடைய நல்ல ஆட்சி
விளக்கமுறும் மனுநெறி தவறாமையும், வெல்லரிய சுகிர்தமொடு வர்த்தகர்
கொள்விலை விற்பனையும் - கெடாத நன்மையுடன் வணிகர் பொருளை
வாங்கி விற்பதும், அதிக புகழும் - பெரும் பேரும், மிக்க அதிகாரமும் -
பெரிய ஆட்சியும், தொழிலாளர் சீவனமும் - தொழிலாளர் வாழ்க்கையும்,
வீரரண சூர வலியும் - போர்க்களத்திலே பகைவர் அஞ்சிப் போர்புரியும்
ஆற்றலும், வல்லமைகள்