சகலமும் எவ்வகை
வலிமைகளும், வேளாளர் மேழியின் வாழ்வினால்
விளைவது அன்றோ - வேளாளர்களின் உழவுத் தொழிலால் உண்டாவன
அல்லவா?
(விளக்கவுரை)
தேவ
+ ஆலயம் : தேவாலயம் : வடமொழித்
தீர்க்கசந்தி; தேவாலயம் (வட) - கடவுள் கோயில். தபோதனர்கள் (வட) -
தவச் செல்வர். நவிலுதல் - சொல்லுதல். தொன்மை+புவி: தொல்புவி,
தொன்மை - பழைமை. மனு : மானிடரின் முதல்வர். மனுவின்
வழிவந்தவர்கள் மானிடர். சுகிர்தம் (வட) - நன்மை. இரணம் - புண்.
புண்படப் போர் செய்யுமிடம் இரணகளம். இரணசூரர் - இரணகளத்திலே
அஞ்சாதவர். சூர் - அச்சம். இரணம் (வடமொழி). ‘மேழிச் செல்வம்
கோழை படாது' - ‘உழுவாருலகத்துக் காணி' என்பனபோல வருவன
வேளாண்மையின் சிறப்பைக் குறிக்கும். வேள் - உபகாரம். (கொடை)
வேளாளர் - உபகாரிகள், வேளாண்மை - கொடைத்தன்மை. வேள்
என்பதற்கு மண் என்றும் வேளாளர் என்போர் மண்ணை உழுது உண்போர்
எனவும் உரைப்பதும் உண்டு.
(கருத்து)
வேளாளரே
உலகத்தைக் காப்பவர். (5)
6.
பிதாக்கள்
தவமதுசெய்
தேபெற் றெடுத்தவன் முதற்பிதா,
தனைவளர்த் தவன் ஒரு பிதா,
தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒருபிதா,
சார்ந்தசற் குருவொருபிதா,
அவம் அறுத்தாள்கின்ற
அரசொருபிதா, நல்ல
ஆபத்து வேளை தன்னில்
அஞ்சல்என் றுற்றதயர் தீர்த்துளோன் ஒருபிதா,
அன்புள முனோன் ஒருபிதா,
கவளம்இடு
மனைவியைப் பெற்றுளோன் ஒருபிதா,
கலிதவிர்த் தவன் ஒருபிதா,
காசினியில் இவரைநித் தம்பிதா என்றுளம்
கருதுவது நீதியாகும்
|
|