மவுலிதனில்
மதியரவு புனைவிமலர் உதவுசிறு
மதலையென வருகுருபரா!
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|
(இ-ள்.)
தவமது செய்தே
பெற்றெடுத்தவன் முதற்பிதா - தவம்
புரிந்து ஈன்றெடுத்தவன் முதல்தந்தை, தன்னை வளர்த்தவன் ஒரு பிதா -
தன்னை வளர்த்தவன் மற்றொரு தந்தை, தயையாக வித்தையைச்
சாற்றினவன் ஒரு பிதா-அருளுடன் கல்வியைக் கற்பித்தவன் ஒரு தந்தை,
சார்ந்த சற்குரு ஒரு பிதா - உயிர் நன்னிலை அடைய மறையை ஓதிக்
கொடுத்தவன் ஒரு தந்தை, அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா -
துனபத்தை நீக்கிக் காப்பாற்றுகிற அரசன் ஒரு தந்தை, நல்ல ஆபத்து
வேளை தன்னில் அஞ்சல் என்று உற்ற துயர் தீர்த்துளோன் ஒரு பிதா -
கொடிய இடையூறு வந்த காலத்தில் அஞ்சாதே என்று ஆதரவு கூறி
நேர்ந்த வருத்தத்தை நீக்கியவன் ஒரு தந்தை, அன்பு உள முனோன் ஒரு
பிதா - அன்புடைய தமையன் ஒரு தந்தை, கவளம் இடும் மனைவியைப்
பெற்றுளோன் ஒரு பிதா - உணவு ஊட்டும் மனைவியை ஈன்றவன் ஒரு
தந்தை, கலி தவிர்த்தவன் ஒரு பிதா - வறுமையைப் போக்கியவன் ஒரு
தந்தை, காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம் கருதுவது நீதியாகும்
- உலகில் இவர்களை எப்போதும் தந்தையர் என்று உள்ளத்திற் கொள்வது
அறம் ஆகும்.
(விளக்கவுரை)
முன்னோன்
என்பது முனோன் என்று இடையில்
எழுத்துக் குறைந்து வந்தது. கவளம் - ஒரு பிடி. யானைக்கிடும்
உணவையே கவளமென்று கூறுவது முன்னாள் வழக்கம். நாளடைவில் நாம் உண்ணும் உணவில் ஒருபிடிக்கும்
வந்து வழங்கி விட்டது. கலி - வறுமை.
மவுலி (வட) முடி. மதலை - மகன். குருபரன் - முருகன்; பரமனுக்கும்
குருவாக இருந்ததனால் குருபரன் ஆனார். உலகியல் கற்பிப்பவன்
ஓராசிரியன்; ஆன்மவியல் கற்பிப்பவன் மற்றோராசிரியன்; இவர்களைப்
போதகாசிரியன் எனவும் ஞானவாசிரியன் எனவும் கூறுவர்.
|