மன்னரைச்
சேர்ந்தொழுகல் கற்புடைய மனைவியொடு
வைகினும் தாமரையிலை
மருவுநீர் எனவுறுதல் இவையெலாம் மேலவர்தம்
மாண்பென் றுரைப்பர் அன்றோ
வன்னமயில்
மேலிவர்ந் திவ்வுலகை ஒருநொடியில்
வலமாக வந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
வன்ன மயில்மேல் இவர்ந்து இவ்வுலகை ஒருநொடியில்
வலமாக வந்த முருகா - அழகிய மயில்மேல் அமர்ந்து இந்த வுலகத்தை
ஒரு விநாடியிற் சுற்றிவந்த முருகனே!, மயிலேறி....... குமரேசனே!-,
அன்னதானம் செய்தல் - (பசித்தவருக்கு) உணவுகொடுத்தல், பெரியோர்
சொல்வழி நிற்றல் - பெரியோர் கூறிய நெறியிலே செல்லுதல், ஆபத்தில்
வந்தபேர்க்கு அபயம் கொடுத்திடுதல் - இடையூறென வந்தவர்களுக்குப்
புகல் அளித்தல், நல் இனம் சேர்ந்திடுதல் - நல்லோருடன்
நட்புக்கொள்ளுதல், ஆசிரியன் வழிநின்று அவன் சொன்னமொழி தவறாது
செய்திடுதல் - ஆசிரியன் போக்கிலே தானும் சென்று அவன் ஆணைப்படி
நடத்தல், தாய் தந்தை துணை நாடி அருச்சனை செயல் - பெற்றோரின் இரு
தாள்களிலும் மலரிட்டு வணங்குதல், உயிர்போகினும் சோம்பல் இல்லாமல்
வாய்மை மொழிதொல்புவியில் நாட்டியிடுதல் - உயிர்போனாலும் சோர்வு
இன்றி உண்மைமொழியை (இப்) பழைய வுலகிலே நிலை நிறுத்தல், மன்னரைச்
சேர்ந்தொழுகல் - அரசரின் ஆதரவிலே வாழ்க்கையை நடத்துதல், கற்புடைய
மனைவியொடு மருவினும் - கற்பிற் சிறந்த இல்லாளுடன் வாழ்ந்தாலும்,
தாமரை இலை மருவுநீர் என உறுதல் - தாமரையிலையிலே கலந்த நீரைப்
போல (ப் பற்றின்றி) இருத்தல், இவையெலாம் - இவை யாவும், மேலவர்தம்
மாண்பு என்று உரைப்பர் - பெரியோருடைய நல்லியல்பென்று கூறுவர்,
அல்லவா? அன்று ஓ: அசை நிலைகள்.
|